பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/568

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


546 தமிழ்நூல் தொகுப்புக் கலை தனிப் பாடல் திரட்டு (1967) முதல் பாகம்-பொழிப் புரையுடன்-தஞ்சை சரசுவதிமகால் வெளியீடு. ஆண்டு: சகம் 1888, கி.பி. 1967. பதிப்பாசிரியர் : ச.பாலசுந்தரம், கரந்தைக் கல்லூரி, தஞ்சை, சிறப்புச் செயலாளர்: A.நாராயணசாமி அச்சு: உக்கடை ரீஅம்பாள் பிரஸ், தஞ்சாவூர். பலரைக் குறித்தும் பல பொருள்கள் குறித்தும் பலர் பாடிய 216 பாடல்களின் தொகுப்பு. முதல்பாட்டு வஞ்சித் துறை: (பிள்ளையார் வணக்கம்) 'வெள்ளை வாரணப் பிளை யார்பதம் உள்ள மேறகால் கள்ள மாறுமே". இவ்விதமான 216 பாடல்கள் உள்ளன. தனிப் பாடல் திரட்டு (1969) - இரண்டாம் பாகம் - பொழிப்புரையுடன். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு. ஆண்டு: சகம் 1891. கி.பி. 1969. பதிப் பாசிரியர் ச. பாலசுந்தரம், கரந்தைக் கல்லூரி. சிறப்புச் செயலாளர்: நீ.கந்தசாமிப்பிள்ளை, மொத்தப்பாடல்கள் 256, பல பொருள் குறித்துப் பலர் பாடியவை. கண்ண்ணி, சிந்து, பா, பாவினம் - முதலிய பலவகைப்பாடல்கள் - முதல் பாடல் முருக வணக்கம், - தனிப் பாடல்கள் (RA302) சரசுவதி, பழநியாண்டவர், பழநிக்குடத்து விநாயகர், ஒதி மலையாண்டவர், மாரியம்மன், கருப்பராயர், பொன்காளியம்மன், மாதேசிலிங்கன், கன்னிமார், கரிய காளியம்மன், முத்துக் கவுண்டன், தாண்டவக் கவுண்டன், சின்னதம்பிக் கவுண்டன், சிலம்பக் கவுண்டன், பெருமாக் கவுண்டன், முத்துவேலப்பக்கவுண்டன், கணுவக்காரைஆவிடை யாக்கவுண்டன், வெங்கிட்டநாயக்கன், பாப்ப நாயக்கன், மயேசுவரி, குப்பக்கொசவன், முதலியோர் மீது பலர் பாடிய