பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/569

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் - 547 பாடல்களின் திரட்டு. இறுதியில் விபீடணன் புத்தி என்னும் தலைப்பில் சில ஏடுகள் உள்ளன. நூல் முழுதும் இல்லை. இறுதி சிதைவு. இவ்வாறு இன்னும் எத்தனையோ தனிப்பாடல் நூல்கள் இருக்கலாம். - . செய்ய வேண்டிய கடமை - இது காறும் தோற்றம் (சுமார்) 125 தனிப் பாடல் திரட் டுகள் பற்றிய அறிமுகம்.தரப்பட்டது. அரிதின் முயன்று தேடி இவைபற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. சிலவற்றிற்குக் கிடைத்த வரைக்கும் சிறிதளவு விவரமே தரமுடிந்தது. ஒவ்வொரு நூலுக்குள்ளும் புகுந்து அரிய ஆராய்ச்சி யொன்றும் இவண் செய்யவில்லை. தொகை பற்றிய படைப்பு இந்நூலாத லின், நூலுக்குள் நுழைய வில்லை. தனிப் பாடல் திரட்டு நூல்கள் தொடர்பாகச் செய்ய வேண்டிய கடமையொன்று தமிழ் அறிஞர்க்கு உண்டு. அக நானூறு (நெடுந்தொகை), நற்றிணை, குறுந்தொகை, புற நானூறு முதலிய நூல்கள் சில, உதிரித் தனிப் பாடல்களின் திரட்டே என்பது, தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இவற் றைப் போலவே, தனிப்பாடல் திரட்டு நூற்பாடல்களையும், காலம் - இடம்-பொருள்-அளவு-பாடியோர் - பாடப்பட்டோர். முதலிய தலைப்பு வாரியாகப் பிரித்துத் தொகுத்துத் தனித் தனிப் பெயர் இட்டு மக்கட்கு வழங்க வேண்டியது முதற் கடமை யாகும். இவ்வாறு செய்து தொகைப் பெயர் தரப்படின், ஆராய்ச்சி யாளர்கட்குப் பெரிதும் பயன் தரும். பொது மக்கள்-அரசர்கள்தலைவர்கள்-கடவுளர்கள்-அன்பு (பக்தி), வழிபாடு-அகம்-புறம்ஒழுக்கம்-பண்பாடு-வரலாறு-நீதி - அரசியல் - மன்பதை (சமுதா யம்) முதலிய பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆராய்ச்சி செய் வதற்கு இம் முயற்சி பெரிதும் துணைபுரியும். பொதுவர்கத் தமிழ் அறிஞர்கட்கும் சிறப்பாக அரசுக்கும் இம் முயற்சி தனிப் பெருங்கடமையாகும். கிடைக்காமல் எங்கெங்கோ ஒளிந்து கிடக்கும் பாடல்களையும் தேடிப்பிடித்துக்கொணர்ந்து மேலும் மிகு பயன் அளிக்கவேண்டும்.