பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ் நூல் தொகுப்புக் கலை தொகுப்பையும் குறிக்கலாயிற்று என்னும் கருத்து முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கே, இதிலிருந்து இன்னொரு புதிய கட்டத்திற்கு நாம் செல்ல வேண்டியவர்களாயுள்ளோம். அஃதாவது-பூமாலை, பாமாலை என்ற இரு வேறு நிலைக்கு இடமின்றி, பாமாலையினையே பூமாலையாக உருவகப்படுத் தும் ஒரு புதுமைதான் அந்தக் கட்டம். இந்த அழகிய அமைப்பைத் தமிழில் நிரம்பக் காணலாம். மதுரைக் காஞ்சியின் இறுதியிலுள்ள "சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும் நல்லிருந் தீந்தாது நாறுதலால்-மல்லிகையின் வண்டார் கமழ்தாமம் அன்றே மலையாத தண்தாரான் கூடல் தமிழ்.” என்னும் பாடலிலும், சேக்கிழாரின் பெரிய புராணத்துத் தடுத் தாட்கொண்ட புராணத்திலுள்ள, - - “.........அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொல் தமிழ் பாடுக என்றார்.....” - என்னும் பாடல் (70) பகுதியிலும், ...நல்லாற்றுர்ச் சிவப்பிர காசரின் சோணசைல மாலையிலுள்ள், 'மதுரம் பெறுகுறு தமிழ்ச்சொல் மலர் கினக்கு அணியும்: பிறவியே வேண்டுவன் தமியேன்...' Tr என்னும் பாடல் (39) பகுதியிலும், வடலூர் வள்ளலாரின் "என் சொல்லணியாம் அலங்கல் அணிந்தருளே’ என்னும் திருவருட்பாப் பகுதியிலும், இன்ன பிறவற்றிலும் பாமாலையே பூமாலை யாக்கப்பட்டிருக்கும் புதுமைப் பொலி வினைக் கண்டு மகிழலாம். இந்த உருவகத்தைக் கொண்டு, தமிழ் மொழியில் பாடல் தொகுப்புக் கலை எந்த அளவுக்கு வளர்ந்து வந்துள்ளது என்பதை உணரலாம். இப்படி ஓர் உருவகத்தை இருபதாம் GITÂ) som sinu-si) grupë 5 “Oxford English Dictionary’ ETsir guth ஆங்கில அகரவரிசை நூலில் காணமுடிகிறது. இந்த நூல்