பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 தமிழ்நூல் தொகுப்புக் கலை இலக்கணத் தொகுப்புகள் 1. இலக்கணத் தொகைஎழுத்து தொ-வெ- டாக்டர் ச.வே. சுப்பிரமணியன். வி.உ.பாரி நிலையம், சென்னை. கூட்டுறவு அச்சகம், திருநெல்வேலி. 1967. இந்தத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இலக்கண நூல்களாவன : தொல்காப்பியம், வீரசோழியம், நேமி நாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமிநாதம் - ஆகியவை. தொகுப்பாசிரியர் இலக்கணத் தலைப்புகளை எடுத்துக் கொண்டு, அவற்றிற்கு உரிய நூற் பாக்களை (குத்திரங்களை) இந்த நூல்களிலிருந்து வரிசையாகத் தந்துள்ளார். மாதிரிக்காக ஒரு காட்டு:- "உயிர் எழுத்து’ என்னும் தலைப்பு இட்டு, உயிர் எழுத்தைப் பற்றி இந்நூல்கள் கூறும் நூற்பாக்கனை ஒன்றன்பின் ஒன்றாக நூற்பெயருடன் தந்துள்ளார். மற்றும், இலக்கிய எடுத்துக்காட்டுகளும் ஈந்துள் ளார். இலக்கண ஆராய்ச்சியாளருக்கு மிகவும் பயன்படும் இத் தொகுப்பைச் செய்த ஆசிரியரை எவ்வளவு பாராட்டினும் தகும். இந்தத் தொகுப்பில் எழுத்திலக்கணம் மட்டும் இடம் பெற்றுள்ளது. 2. இலக்கணத் தொகை - சொல் தொ-வெ-டாக்ட்ர் ச.வே. சுப்பிரமணியன். வி.உ - ஜெய குமாரி ஸ்டோர்ஸ், நாகர் கோயில். கேரளப் பல்கலைக்கழகக் கூட்டுறவுப் பண்டக சாலை அச்சகம், திருவனந்தபுரம். 1971. இது சொல் இலக்கணம் பற்றியது. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இலக்கண நூல்களாவன: தொல்காப்பியம், வீர சோழியம், நேமி நாதம், நன்னூல் பிரயோக விவேகம், இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து தொன்னூல் விளக்கம், முத்து வீரியம்-ஆகியவை. மேலே கூறி யுள்ளாங்கு-அதாவது-எழுத்திலக்கணத் தொகுப்பில் செய்திருப் பது போலவே, இந்தச் சொல்லிலக்கணத் தொகுப்பிலும் தொகுப்பாசிரியர் செய்துள்ளார். மிக்க பயனுள்ள பணி.