பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 551 Edited by Sambarnoorthy.B.A., B.L. and Chitoor Subramania Pillai. The India Printing Works, Mylapore, Madras-4. - மேலே ஆங்கிலத்தில் உள்ளது தரப்பட்டது: சாம்பமூர்த்தி ஆங்கிலத்திலும், சுப்பிரமணியப் பிள்ளை தமிழிலும் முகவுரை எழுதியுள்ளார்கள். சந்திர சேகரன் 27, மார்ச்சு - 1961 என் னும் நாள் இட்டு ஆங்கில்த்தில் முகவுரை எழுதியுள்ளார். இத் தொகுப்பு இரண்டு பாகங்களாக உள்ளது. முதல் பாகப் பாடல்கள்-1433; இரண்டாம் பாகப் பாடல்கள்.1460; ஆக மொத்தக் கீர்த்தனைகள்-2893. முதல் பாகம் 572 பக்கம்இரண்டாம் பாகம் 578 பக்கம்-மிகவும் நீள-அகலம் உள்ள நூல். இந்நூற் கீர்த்தினைகள் குன்றக்குடி முருகன் மீது இயற் றப்பட்டவை. ஆசிரியர் பெயர் தெரிவிக்கப்படவில்லை. சந்திர சேகரனது முகவுரையில் உள்ள செய்திகள், வருக; ஒரே ஒரு ஒலைச் சுவடித் தொகுப்பிலிருந்து பதித்தது, அதன் எண்: NO.R.5034. ஒலைச் சுவடி அளவு 14:' x }. மொத்த ஒலைகள்-1248. பக்கத்திற்கு 3 அல்லது 4 வரிகள். இது, 1954-55இல் திருச்சி ஜில்லா -மிதிலைப்பட்டி-சிங்கார வேலுக் கவிராயரிடமிருந்து விலைக்கு வாங்கியது. எழுதப் பட்டது எப்போதோ தெரியவில்லை, . இவ்வாறு சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 2893 கீர்த் தனைகள் எழுதியது அரிய பெரிய முயற்சியாகும். இவை இசையரங்குகளில் பாடப்பட வேண்டுமே. சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் ஆசிரியர் ச. வேத நாயகம் பிள்ளை. வெளியீடு: ஆர்.ஜி. பதி கம்பெனி, சென்னை. ப. குப்புசாமி முதலியார் பதிப்பித்த பிரதிக்கிணங்க, சென்னை வாகீஸ்வரி அச்சகத்தில் 1967-இல் அச்சிடப்பட்டது. 192 கீர்த்தனைகள்.