பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 தமிழ்நூல் தொகுப்புக் கலை 'தமிழ் இசைப் பாடல்கள்' என்னும் தலைப்பில் இவை குறிப் பிடப்பட் டுள்ளமையைக் காணலாம். கீர்த்தனாஞ்சலி - ஆசிரியர்-சுத்தானந்த பாரதியார். வெளியீடு - புதுயுக நிலையம், புதுச்சேரி. அச்சு: அரவிந்த ஆசிரம அச்சகம், புதுச் சேரி, சிதம்பர கீதம் என்பது முதல் அன்பு மாலை என்பது வரையிலான 9 தலைப்புகளில் 556 இன்னிசைப் பாடல்கள் உள்ளன். - - மெய்ஞ்ஞான ரத்தினாலங்க்ாரக் கீர்த்தனம் ஆசிரியர்: முகமது ஹம்சா லெப்பை அருளியது. சக்கர வர்த்தி அச்சுக் கூடம், சென்னை-1936. உள்ளுறை: இசுலாம் பற்றிப் பல தலைப்புகளில் கீர்த்தனங்கள் உள்ளன. இறுதியில் கப்பல் சிந்து' என்னும் பகுதி உள்ளது. மொத்தம் 65 கீர்த் தனங்கள். - கீர்த்தனைக் கொத்து ஆறுமுக உபாத்தியாயர், முத்துத்தாண்டவர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், கோபால கிருஷ்ண பாரதி - முதலியோ ரின் கீர்த்தனத் திரட்டு. இந்தக்கொத்து, பல ஆண்டுகளில் பல அச்சுக் கூடங்களில் பதிப்பிக்கப்பெற் றுள்ளது. இசை மாலை ஆ-சு. சண்முகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். இசையமைப்பு - சீர்காழி கோவிந்தராசன். விற்பனை உரிம்ை - தொல்காப்பியர் நூலகம், சென்னை. முத்தையா அச்சகம், சென்னை. 1961. பல சமயம் பாடிய இசைப் பாடல்களின் தொகுப்பு. உ-இறைமை, சான்றோர், நாடு, மொழி, இசை, தாய்மை, மக்கட் செல்வம், இளைஞருக்கு - என்னும் எட்டுப் பெரிய தலைப்புகளின் கீழ், உவமை யில்லாப் பொருள் முதல் ‘வாழ்ந்த வாழ்வைப் பெற்றிடு' என்பது வரையிலான 41 உள் தலைப்புகளில் இசைப்பாடல்கள் உள்ளன. கீர்த்தனைப் பாடல்கள் திரட்டு ஆ-தண்டபாணி சுவாமிகள். வெ. - கெளமார மடாலயம்