பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/580

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


558 தமிழ்நூல் தொகுப்புக் கலை லலிதா தாசர் கீர்த்தனைகள் ஆ- லலிதா தாசர். தொ - செம்பை வைத்தியநாத பாக வதர். பலவகைக் கீர்த்தனைகள் உள்ளன. வேதபுரிக் கீர்த்தனைகள் ஆ- டி.ஆர். விசுவநாத சாத்திரி. வெளியீடு - சங்கீதசதன். 1937. வேதபுரி இறைவன் மீது பாடிய கீர்த்தனங்கள். தமிழிசை மணிமாலை (கீர்த்தனைப் புத்தகம்) ஆ நி.செ. சிதம்பரேச்வர தீட்சதர், சிதம்பரம். நிதி உதவி - சி.ஆர். முருகேச முதலியார், சிதம்பரம் - கிராஸ்வேடு பிரஸ். 1948, உ - விநாயகர் கீர்த்தனை முதல் மங்களம் வரை 105 கீர்த்தனங்கள் உள்ளன. மாணிக்க வாசகர் சரித்திரக் கீர்த்தனை ஆ:கரந்தை - கருணைப் பிரகாச சுவாமி. பதிப்புகரந்தை சிவகுப்புசாமி, கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை. இரண் டாம் பதிப்பு - 1932. உ - திருவிளையாடல் புராணம், திருவாத ஆரர் புராணம், திருவாசகம் முதலிய நூல்களிலிருந்து சில பாக்கள் தந்து, அவற்றிற்கு ஏற்பக் கீழே கீர்த்தனங்கள் எழு தப்பட்டுள்ளன. மாணிக்க வாககர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பு ஒரு புது முறை. இசை மணி மாலை (மூன்றாம் தொகுதி) ஆசிரியர்: ம.ப. பெரியசாமித்துரன். இசை என். சிவராம கிருஷ்ணையர் & சித்துர் சுப் பிரமணியப் பிள்ளை. அல்லயன்ஸ் கம்பெனி - சென்னை. மொத்தம் 45 உருப்படிகள் - கீர்த்தனங் கள்.150 பாடல்கள் கொண்ட முதல் இரண்டு தொகுதிகள் முன்பே வந்துள்ளன. கீதத் தமிழ் ஆ - கே. எம். பால சுப்பிரமணியன், சாது அச்சுக்கூடம், சென்னை-1-5-1947. பல ஊர்க் கடவுளர் பலர்மீது பாடிய நூறு கீர்த்தனப் பாக்களின் திரட்டு.