பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 - தமிழ்நூல் தொகுப்புக் கலை தலைப்புள்ள பாடல்கள் - குயில் பற்றிப் பல சமயம் பாடிய பாடல்கள் - ஆகியவற்றின் தொகுப்பு இது. பாரதியார் கவிதைகள் - கண்ணன் பாட்டு வெளியீடு: கன்னித் தமிழ்ப் பதிப்பகம், மதுரை. விற்பனை உரிமை : பாரதி புத்தக நிலையம், மதுரை. அச்சு: கலைமகள் பிரஸ், காரைக்குடி. காலம்: அக்டோபர், 1955. உள்ளுறை: கண்ணன் என் தோழன் முதல் கண்ணம்மா எனது குல தெய்வம் வரை 23 தலைப்புகளில் பாடல்கள் உள் |ளன. பல பாடல்கட்கு இராகம் - தாளம் அமைத்துள்ளனர். பாரதியின் பாடல்கள் பாரத சக்தி நிலையம் - லிபர்ட்டி பிரஸ், புதுவை - 1956. உள்ளுறை: (மணக்குள) விநாயகர் நான் மணி மாலை, முரு கன் பாட்டு, உப்பளம் முத்து மாரியம்மன் பாட்டு, கண்ணன் என் சேவகன், கண்ணன் எனது சீடன், தமிழ், நடிப்பு சுதேசி கள்-ஆகியவை உள்ளன. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள உப்பளம் என்னும் ஊர், புதுச்சேரி நகருக்குத் தென்கிழக்கில் உள்ள பகுதியாகும். - - - மகாகவி பாரதியார் கவிதைகள் பாரதியாரின் கவிதைகள் முழுவதும் உள்ளதாகச் சொல் லப்படும் இது, சென்னை - சக்தி காரியாலய வெளியீடாகும். இரண்டாம் பதிப்பு அச்சு: சண்டே டைம்ஸ் பிரஸ், சென்னை: இரண்டாம் பதிப்பாண்டு 11.9.1957. முதல் பதிப்பு:ஹேவிளம்பி - புத்தாண்டுப் பிறப்பு - . உள்ளுறை: இத் தொகுப்பில், நான்கு பெரும் பாகங்களும், ஒவ்வொரு பாகத்திலும் பல பெருந்தலைப்புகளும், ஒவ்வொரு பெருந்தலைப்பிலும் பல சிறு தலைப்புகளும், ஒவ்வொரு சிறு தலைப்பிலும் பல பாடல்களும் உள்ளன. முதல் பாடல் 'வந்தே மாதரம்' என்பது. இறுதிப் பகுதி: புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுக் கிடைத்த இளசை ஒருபா ஒருபஃது" என்பது. இனித் தலைப்புகள் வருமாறு: