பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/586

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


564 தமிழ்நூல் தொகுப்புக் கலை பாரதியார் கவிதைகள் - வெளியீடு: பழநியப்பா பிரதர்ஸ், சென்னை. அச்சு: ஏஷி யன் பிரிண்டர்ஸ், சென்னை-5. முதல்பதிப்பு, 11-12-1962. உள்ளுறை, தேசீய கீதங்கள், தெய்வப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள், முப்பெரும் பாடல்கள், புதிதாகச் சேர்க்கப் பெற்ற சில கவிதைகள்-ஆகியவற்றின் தொகுப்பு. - பாரதியார் கவிதைகள் பதிப்பாசிரியர்கள்: டி.வி.எஸ்.மணி, சீனிவிசுவநாதன்: வெளியீடு, வானவில் பிரசுரம், சென்னை-35. அச்சு-நவ பாரத் பிரின்டர்சு, சென்னை-14. புதிய பதிப்பு, 24-1-1980;மறுபதிப்பு: 26-10-1981; அடுத்த பதிப்பு: 14-2-1982. உள்ளுறை: பக்திப் பாடல்கள், தேச பக்திப் பாடல்கள், தன் வரலாறும் பிற பாடல்களும், காவியங்கள், தனிப்பாடல் கள்-என்னும் பெரிய தலைப்புகளின் கீழ்ப் பல உள் தலைப்பு களும்,பாடல்களும் அமைந்துள்ளன. இறுதியில் புதிய பாடல் கள் சிலவும் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பையும்,ஏறத் தாழப் பாரதியார் பாடல்களின் முழுத் தொகுப்பாகக் கருத லாம். இவ்வாறு இன்னும் பல தொகுப்புகள் இருக்கலாம். தொகுப்பாசிரியர்கட்கும் பதிப்பாசிரியர்கட்கும் மிகவும் நன்றி செலுத்த வேண்டும். பெரிய செல்வத்தை அவர்கள் மக்கட்குத் தந்துள்ளனர் அல்லவா ? பாரதிதாசன் நூல்கள் உலகப் பெருங்கவிஞர்களுள் ஒருவராக மதிக்கத்தக்கவர் பாரதிதாசன். இவர் வளமான-நயம் மிக்க பாடல்களையும் புரட்சி மிக்க பாடல்களையும் இயற்றியதால் பாவேந்தர் என் றும் புரட்சிக் கவிஞர் என்றும் சிறப்புப் பெயர்கள் வழங்கப் பெற்றுள்ளார். இவர் பாடிய பாடல் திரட்டு நூல்களைப்பற்றி இவண் காண்பாம். பாரதிதாசன் கவிதைகள் வெளியீடு: செந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி (புதுக்கோட்டை) மாவட்டம். விற்பனை உரிமை;