பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 571 "சரசுவதி துதி முதல் விண்ணப்பம் வரை 134 உட்பிரிவு கள் உள்ளன. இறுதிப் பெரிய தலைப்பாகிய பிற்சேர்வு' என் பதில் பறவையின் சிந்தனை முதல் அரியர் யார்?' என்பது வரை ஏழு உட்பிரிவுகள் உள்ளன. சுவைக்கச் சுவைக்கத் தேனொழுகும் பாடல்களின் தொப்பு இது, மலரும் மாலையும் (2) ஆறாம் பதிப்பு: 26 சனவரி 1956. பாரிநிலைய வெளியீடு: ராயல் பிரின்டிங் ஒர்க்ஸ், சென்னை. தலைப்புகளில், முதல் (1938 ஆம்) பதிப்பினின்றும் இப்பகுதி சிறிது மாறுபடுகிறது வருமாறு: - 1. பக்தி மஞ்சரி, 2. இலக்கியம், 3. சரித்திர கவிதை, 4. மழலை மொழி, 5. இயற்கை இன்பம், 6. காட்சி இன்பம், 7. கதைப் பாட்டு, 8. உள்ளமும் உணர்வும், 9. வையமும் வாழ்வும், 10. சமூகம், 11. தேசீயம், 12. வாழ்த்து, 13. சரம கவி, 14. கதம்பம், 15. முத்துக் குவியல்-இவை பெரிய தலைப்பு é36IᎢ . 'சரசுவதி துதி முதல் குன்றக்குடி அடிகளார் வாழ்த்து, வரை 201 உள் தலைப்புகள் உள்ளன. தேசிக விநாயகம் பிள்ளையின் கீர்த்தனங்கள் சென்னை - பாரி நிலைய வெளியீடு: பொன்னி அச்சகம், சென்னை. பல காலங்களில் பல இதழ்களில் வந்த கீர்த்தனப் பாடல்களின் தொகுப்பு. நாமகள் துதி முகல் விண்ணப்பம் வரை 75 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன.பதிப்பாண்டு 1953, குழந்தைச் செல்வம் சென்னை - பாரி நிலைய வெளியீடு. சாந்தி பிரஸ் சென்னை. ஏப்ரல், 1954. - - பெரிய தலைப்புகள்: 1. மழலை மொழி, 2. இயற்கை இன்பம், 3. காட்சி இன்பம், 4. கதைப் பாட்டு, 5. பஞ்சா மிர்தம். உள் தலைப்புகள்: 'முத்தம் தா முதல் திருவடி தொழுகின்றோம் வரை 58 தலைப்புகள்.