பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/594

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


572 தமிழ்நூல் தொகுப்புக் கலை காதல் பிறந்த கதை கவிமணியின் கவிதைத் தொகுதி. அருள் நிலையம், இராமச் சந்திரபுரம். மதுராஸ் ரிப்பன் பிரஸ், இராமச் சந்திரபுரம், 1-7-1947. காதல் பிறந்த கதை முதல் திருவள்ளுவர் வரை 39 தலைப்புகளில் பல பாடல்கள் படங்களுடன் உள்ளன. இறுதிப் பத்துப் பாடல்கள் கீர்த்தனங்கள். முதல் பாடலின் தலைப்புப் பெயர் நூற்பெயராகத் தரப்பட்டுள்ளது. இளந்தென்றல் - சிறுவர்க்கான பாடல்கள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. புதுமைப் பதிப்பகம், சென்னை, விஷா, சித் திரை. 1941. கவிமணியின் கவிதைத் தொகுப்பிலிருந்து திரட்டியது. சரசுவதி துதி முதல் வாழ்த்து ஈறாக 46 தலைப்புகளில் படங் களுடன் பலபாடல்கள் உள்ளன. 2. நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை நாட்டு விடுதலையில் பங்கு கொண்டவர்.அண்ணல் காந்தியடிகள்பால் மிக்க ஈடுபாடு கெண்டவர். அவருடைய சுவையான சில படைப்புகள் வருமாறு:- - தமிழன் இதயம் (1) - வெளியீடு; தமிழ்ப் பண்ணை, சென்னை - 17. முதல் பதிப்பாண்டு - 1922. கத்தியின்றி ரத்தமின்றி என்னும் தலைப்பு முதல் வாழ்க வாழ்க’ என்பதுவரை பல தலைப்பு களின் கீழ்ப் பாடல்கள் உள்ளன. இது தமிழ்ப் பண்ணையின் முதல் வெளியீடு. தமிழன் இதயம் (2) சென்னை - தமிழ்ப் பண்ணை வெளியீடு. 5 ஆம் பதிப்பு, மார்ச்சு, 1946. அச்சு: இந்தி பிரச்சார் பிரஸ், சென்னை - 17. "தமிழன் இதயம் முதல் வாழ்க வாழ்க வரை 82 தலைப்பு களில் பாடல்கள் உள்ளன. பிரார்த்தனை தெய்வம், பெரியோர், தேசம், கொடி ஆகிய பொருள்