பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/596

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


574 தமிழ்நூல் தொகுப்புக் கலை உள்ளன. பரமன் முதல் வாழ்க வாழ்க’ என்பதுவரை 306 உள்தலைப்புகள் உள்ளன. காந்தி அஞ்சலி ஆ. நாமக்கல் கவிஞர், கவிஞர் பதிப்பகம், கோவை. நவ பாரத் பிரஸ், சென்னை. 3ஆம் பதிப்பு. மன்மத. காந்திபற்றிப் பல தலைப்புகளில் பாடல்கள். நாமக்கல் கவிஞரின் பாடல்களுள், "கத்தி யின்றி ரத்த மின்றி யுத்தமொன்று வருகுது', 'தமிழர் என்றோர் இனம் உண்டு-தனியே அவர்க்கோர் குணமுண்டு', 'தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்து நில்லுடா"- முதலிய சில பாடல்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை. 3. சுத்தானந்த பாரதியார் சுத்தானந்தரின் கவியரங்கம் - சுத்தானத்த பாரதியாரின் கீர்த்தனைப் பாடல்கள் பற்றி வேறு தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இது அவருடைய கவியரங்கப் பாடல்களின் தொகுப்பு. வெ.சுத்தானந்த நூலகம், சென்னை. 1963. உ-கலைமணித் தெய்வம் முதல் வாழி வாழி வரையிலானநூறுகவியரங்கப் பாடல்கள் உள்ளன. வானொலிக் கவியரங்கப் பாடல்களும் உண்டு: உலக்ப் பாட்டு ஆ- சுத்தானந்த பாரதி. வெ. - சுத்தானந்த நூலகம், சென்னை. 1962. உ - சுத்த சத்தி தாண்டவம் முதல் ஜயக் கொடி வரையிலான 90 தலைப்புகள். முன்னேற்ற முழக்கம் - ஆ -சுத்தானந்த பாரதியார். வெ-சுத்தானந்தர் நூலகம், சென்னை, 1963. முன்னேறு மனிதா முதல் தேனும் பாலும் வரை 124 தலைப்புகளில் பாடல்கள் பல. சங்க நாதம் ஆ சுத்தானந்த பாரதியார். சுத்தானந்த நூலகம், சென்னை. சுத்தானந்த அச்சகம். 1963. ஜய ஜய கீதம் முதல் வல்லரசு வரை 86 தலைப்புகள் பல இனப் பாடல்கள். நாடு, வீறு பெறப் பாடிய ஆவேசப் பாடல்கள்.