பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/597

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு 575 கவியோகியின் பாடல்கள் ஆ-சுத்தானந்த பாரதியார். சுத்தானந்த நூலகம், சென்னை. 1962 முதல் 1969 வரை அச்சான எட்டு நூல்கள் கொண்ட திரட்டு. அவை: உலகப் பாட்டு, கவியரங்கம், சிங்க நாதம், இந்திய சரித்திரக் கும்மி, நெஞ்ச மாலை, குழந்தை இன்பம், முன்னேற்ற முழக்கம், காந்தி காலட்சேபம் . ஆகியவை. இவர் நூல்கள் சில, வேறு சில தலைப்புகளிலும் உள்ளன. கவிமணி, நாமக்கல்லார், சுத்தானந்தர் ஆகிய மூவரும் வயதாலும் தரத்தாலும் ஒத்த மதிப்புடையவராகப் போற்றப் படுகின்றனர், தமிழ் இசைப் பாடல்கள் தமிழ் நாட்டில் தமிழ் அல்லாத பிற மொழிகளில் இசை யரங்குகள் பல்லாண்டுகளாக நடைபெற்று வந்தன. இச்ை யரங்கின் இறுதியில் துக்கடா என்னும் பெயரில் ஒரு தமிழ்ப் பாடல் இடம் பெறும். இதனினும் தமிழனுக்கு உயிரை விடு வதற்கு ஏற்ற மானக்கேடு வேறு யாது உளது? ஆனால், இந் நிலையைக் கண்டும், தமிழன் உண்டும் உடுத்தும் பிள்ளை பெற்றும் உயிரோடு (மானம் விட்டு) வாழ்ந்துகொண்டிருந் தான். பார்த்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவிய அண்ணாமலை செட்டியார். இந்த இழிநிலையைப் பொறுக்க முடியாதவராய், இசையரங்குகள் தமிழில் நடைபெற வேண்டும் என்னும் நோக்குடன் தமிழ் இசை இயக்கம் தொடங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 11 - 5 - 1929 ஆம்நாள் தமிழ் இசைக் கல்லூரிப் பிரிவு தொடங்கினார். தமிழ் நாடெங்கணும் இந்த இயக்கம் இடம்பெறவேண்டும். தமிழில் இசைப் பாடல்கள் இயற்றல் வேண்டும் - உள்ள பாடல்களைத் திரட்டி நூலாக்க வேண்டும்- தமிழில் பாடவேண்டும்-முதலிய திட்டங்களைத் தீட்டினார். அண்ணாமலை நகரிலும் பிற விடங்களிலும் தமிழிசை மாநாடுகள் நடத்தினர். இந்த இயக்கத்திற்குச் சிலர் எதிர்ப்பும்