பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/598

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


576 தமிழ்நூல் தொகுப்புக் கலை தெரிவித்தன்ர். எதிர்ப்பு தெரிவித்தவர்களுள், அம்மா - அப்பா என்று தமிழ் பேசிய நன்றி கெட்ட நாய்களும் உண்டு. முதலில் பத்தாயிரம் உரூபாவும் பின்னர்ப் பதினையாயிரம் உருபாவும் இதற்கென முதல் பொருளாக வைத்தார். இந்தக் தொகை அந்தக்காலத்தில் மிகப் பெரிய தொகையான மதிப்பு உடையது. தமிழ் இசை அறிஞர்கட்கு நன்கொடைகளும் பரிசுகளும் வழங்க ஏற்பாடு செய்தார். 23-1-1942 ஆம் நாள் அண்ணாமலை நகரில் இசைத் தேர்ச்சியாளர் கழகம் நிறுவப்பெற்றது. பலர் உறுப்பின ராயினர்; தம்மிடம் உள்ள பாடல்களை அனுப்பவும் சுரம் அமைத்துத் தரவும் உடன்பட்டனர். பல திட்டங்கள் தீட்டப் பட்டன. 25-1-1942 ஆம் நாள் அண்ணாமலை நகரில் இசை மாநாடு நடைபெற்றது. பலரும் சேர்ந்து பாடல்கள் தொகுத் தனர். 28-1-1942 ஆம் நாள், இசைக்கல்லூரி, ஆசிரியர்கள் 916 தமிழ் இசைப் பாடல்களைத் தொகுத்தனர். அவையாவன: முத்துத் தாண்டவர் பாடல்கள் 84, மாரிமுத்துப் பிள்ளை 14, இராமலிங்க சாமிகள் 7, வேத நாயகம் பிள்ளை 192, அருணா சலக் கவிராயர் 193, இராமசாமி சிவன் 14, ஆனையா 8, அச்சுத தாசர் 240, பராங்குச தாசர் 50, திருவிளையாடல் புராணக் கீர்த்தனை 12, கவி குஞ்சர பாரதி 90,தசமஸ்கந்தக் கீர்த்தனை 12-ஆக மொத்தம் 916 ஆகும். பின்னர், கோபால கிருஷ்ண பாரதியாரின் 200 கீர்த்தனங்கள் சேர்க்கப்பட்டன. அண்ணாமலை நகரில் முதலில் நடைபெற்ற இசையிகலில் பின்வரும் ஐவர்க்குப் பரிசுகள் வழங்கப் பெற்றன: - 20 பாடல்கள் தந்த இலக்குமணப் பிள்ளைக்கு முதல் பரிசு தரப்பட்டது. 8 பாடல் தந்த கீழ்வேளுர் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கும்- 6.பாடல் தந்த மாயவரம் விசுவ நாத சாத்தி ரிக்கும் இரண்டாம் பரிசு சமனாகப் பகிர்ந்து தரப்பட்டது. 6 பாடல் தந்த வைணிககாயக வித்துவான் கிருஷ்ணமாச்சாரி யாருக்கும்- 6 பாடல் தந்த பாப நாசம் சிவத்திற்கும் மூன்றாம் பரிசு சமனாகப் பகிர்ந் தளிக்கப்பட்டது.