பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


iw அறிவார்ந்த தொகுப்புக்கள் தமிழுக்கும் தமிழகத்திற்கும். பெருமை சேர்க்கும் பழம்பெரும் தொகுப்புக்கள். ஒழுங்கு வலிமை சிறப்பு அழகு முழுமை மதிப்பு அனைத்தும் தொகுப்புக்களால் கூடுகின்றன. செல்வத்தைத் தொகுத்துச் சிந்தை மகிழ்வோர் சிலர். சிந்தனைகளைத் தொகுத்து இன்புறுவோர் சிலர். எண்ணங்களைத் தொகுத்து ஏற்றம் பெறுவோர் சிலர். மனிதகுல வரலாற்றில் காலங் காலமாகத் தொகுப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொகுப்பு முறைகள் அறிவியல் முறைப்படி வளர்ந்துள்ளன. தொகுப்பியல் இன்று கலையாக வளர்ந்து வருகிறது. கோடி தொகுத்தார்க்கும்' என்ற வழக்கு குறளில் காணப்படுகிறது. பொருளைக் குவிய லாகப் பார்க்கிறபோது மனம் மகிழ்கிறது. பறவைகளின் தொகுதி மரங்களின் தொகுதி கட்டிடங்களின் தொகுதி அணிகலன்களின் தொகுதி கருத்துக்கும் காட்சிக்கும் இன்பம் நல்குவன. கவிதைத் தொகுதிகளோ, காலத்தை வென்று கலை ஒளிபரப்பி மனித குல சிந்தனைக்கு வளம் சேர்க்கின்றன. ஒருவர் அரிய பெரிய முயற்சி செய்து தொகுக்கிறார். . பலர் எளிதாகச் சுவைக்கிறார்கள். இதுவே தொகுப்பு நமக்குத் தரும் பெரும் பயன். - - - சான்றோர் தம் சிந்தனை வளம் ஒரு சேரத் தொகுக்கப் பெறும்போது அவை தரும் பயன் அளவிட முடியாதது. தமிழில் முன்னைப் பழமைக்கும் பழமையின் செய்திகள் தொகுக்கப்பெற்றுள்ளன. பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இன்று பூக்கும் கவிதைகளும் தொகுக்கப் பெறுகின்றன.