பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 2. உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை உலக மொழிகளுள், வளர்ச்சி பெற்றுள்ள பெரும் பாலான மொழிகளில் 'நூல் தொகுப்புக் கலை இடம் பெற்றுள்ளது. முன்னணியில் உள்ள எல்லா மொழிகளிலும் தொகை நூல்கள் நிரம்ப உள்ளன. இன்று உலக அரங்கில் ஐரோப்பிய மொழி களே பெரிதும் செல்வாக்குற்றிருப்பது வரலாறு கூறும் உண்மை. ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் தொகை நூல் கள் பல தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்த மொழி கிரீக் மொழியாகும். ஐரோப்பிய மொழிகளைப் பொறுத்த வரையில் தொன்மைப் பெருமையும் முதன்மைச் சிறப்பும் கிரீக் மொழிக்கே கொடுத்துவிட வேண்டும். கிரீக் தொகை நூல் களை மொழி பெயர்த்துக் கொண்டதின் வாயிலாகப் பல ஐரோப்பிய மொழிகள் தொகை நூல்களைப் பெற்றன. மற் றும், கிரீக் தொகை நூல்களின் மாதிரியைப் பின்பற்றிப் பல தொகை நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் தோன்றலாயின. எனவே, கிரீக் தொகை நூல்களைப் பற்றிய விவரங்களை முதலில் இங்கே தொடங்குவோம்: (அ) கிரீக் தொகை நூல்கள்: கிரீக் மொழியில், பல்வேறு சமயத்தில்-பல்வேறு பொருள் கள் பற்றிப் பலரால் இயற்றப்பட்ட சிறுசிறு பாடல்களே முதலில் தொகை நூல் என்னும் பெயரால் தொகுக்கப்பட்டன. தனித்தனியான சிறுசிறு பாடல்களேயன்றி, பெரிய பெரிய பாடல்களிலிருந்தும், ஒரு தனி நூலிலிருந்தும் பிரித்து எடுக்கப் பட்ட பாடல் பகுதிகளும் இவ்வகைத் தொகை நூல்களில் இடம் பெற்றன. சிறந்த இலக்கிய மதிப்பு (Literary Value) மிக்க பாடல்களே தொகை நூல்களில் இடம்பெற்று ஒளிவீசித் திகழ்ந்தன. நாளடைவில் கிரீக் நூல் தொகுப்புக் கலை பல்வேறு முாறுதல்களை அடையத் தொடங்கியது. இத்தகைய மாறுதல்