பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 தமிழ்நூல் தொகுப்புக் கலை முதல் சங்ககாலத்தில் இருந்தமை. அகத்தியர் முத்தமிழ் இலக் கணம் இயற்றியமை, இடைச் சங்கம் - தொல்காப்பியத்தில் நரம்பின் மறை' என்ற பெயரால் இசை நூல் குறிக்கப்பெற்றுள்ள்மை. கடைச் சங்க காலத்தில்-சிற்றிசை, பேரிசை முதலிய இசை நூல்கள் இருந்தமை. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்ச்கு நல்லார், பண்டைய இசை-நாடக நூல்கள் அழிந்தன என்று கூறியுள்ளமை. "...ஆடல் பாடல் இசையே என்ற சிலப்பதிகார அடியி லுள்ள இசை என்பதற்குப் பொருள் கூறுமிடத்து, இசை யென் றது, 'நரம்பு அடைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத்தொண்ணுாற்று ஒன்றாகிய ஆதியிசைகளும் என்றமையால் இசையின் விரிவனைத்தையும் நுட்பமாகப் பண்டைத் தமிழர் ஆய்ந்து கணக்கிட்டனர் என்பது தெளி வாம். (முகவுரை: பக்கம் 4,5) ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதலாம் மகேந் திர வர்மப் பல்லவன் காலத்தில், சரிகமயதநி-முறை வந்தமை -அப்போது கீர்த்தனங்கள் இல்லாமை. 3 ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை சமணர் கலப்பால் தமிழிசை தளர்வுற்றமை. தேவாரங்கள் தமிழ்ப்பண்களுடன் பாடப் பெற்றமை.8 ஆம் நூற்றாண்டளவில் திருவாய் மொழி- திருப் பாடல்களும் தமிழ்ப் பண்ணுடன் பாடப் பெற்றமை கி.பி. 12 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே, இப்போது சிறப்பாகப் பேசப்படுகின்ற வடமொழி இசை நூல்கள் தோன்றினமை ... முதலிய செய்திகள் கா. சுப்பிரமணியப் பிள்ளையின் 73 பக்க முகவுரையில் உள்ளன.மேலே தரப்பெற்றுள்ள செய்திகள் 73 பக்க முகவுரையின் முதல் 14 பக்கங்களில் உள்ளவற்றின் சுருக்கக் குறிப்பேயாகும். அடுத்த 59 பக்கச் செய்திகள் விரி வஞ்சி விடுக்கப் பெற்றன. இந்த முதல் தொகுதியின் மாதிரிக்காக, இந்தத் தொகுதி யில் இரண்டாம் பாடலாக உள்ள “தமிழ்த் - தாயைப் போற்றல்' என்னும் பாடல் பின்வருமாறு: