பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/601

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு 579 தமிழ்த் தாயைப் போற்றல் (General) இராகம்: நாத நாமக் கிரியை 51 ஆவது மேளத்தில் தாளம் ஆதி. பிறந்தது ஆ: ச ரி கா ம ப த நீ அ: த ப ம கா ரி ச நீ சா பல்லவி தாயைப் போற்றுங்கள் - பைந்தமிழ்த் தாயைப் போற்றுங்கள் - நந்தமிழ்த் - தாயைப் அனுபல்லவி தூய தொன்மொழி, தொட்டிலில் நாம் கற்ற நேய நன்மொழி கித்திய வான் மொழித்-தாயைப் சரணம் 1. மண்ணில் தலைசிறந்த வான்கவி கம்பர் மக்களறம் வகுத்த வள்ளுவத் தேவர் ஒண்மணி வாசகர் கண்மணி வள்ளலார் உத்தம ராகிய இத்தகையோர்க் குற்ற - தாயைப் 2. தேவர் விருப்புறும் மூவர். மெய்ஞ்ஞானத் தேற்றருங் தாயு மானவர், தொண்டர் யாவருக்கும் தலையாய கிழார், சங்கம் ஏவிய கீரர், இப்பாவலரைத் தந்த - தாயைப் 3. பொய் கொண்ட பூமியில் மெய்கண்ட தேசிகர், புங்கவர் வான்திரு மந்திரங் தந்தவர், வைகுந்தங் காட்டிய வண்சட கோபர் மன்குல சேகரர், இன்னவரைப் பெற்ற - தாயைப் என்பது முதல் தொகுதியின் இரண்டாம் பாடல். தமிழிசைப் பாடல்கள் என்னும் தலைப்பில் 21 தொகுதிகளை அண்ணா மலைப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இனி முறையே அவற்றைக் காண்பாம்