பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/602

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


580 தமிழ்நூல் தொகுப்புக்கலை இரண்டாம் தொகுதி தமிழ்க் கீத வர்ணங்கள் டைகர் வரதாச் சாரியார் முதலிய பதினொருவர் எழுதிய பாடல்களின் தொகுப்பு இது. முதல்பதிப்பு 1943. இரண்டாம் பதிப்பு: 1953. அ.ம.ப.க.க. பாடல் திருத்தம்; மு. அருணாசலம் பிள்ளை. இசைக் கல்லூரிப் பேராசிரியர் க. பொன்னையா பிள்ளை 3-11-1943நாள் இட்டு முகவுரை எழுதியுள்ளார். சுர தாளக் குறிப்பு: கோமதி சங்கர ஐயர். பொன்னையா பிள்ளை யின் முகவுரையிலிருந்து சிறிது வருமாறு; 'இப்புத்தகத்தில், இசையின் ஆரம்பப் பாடலாகிய சுர வரிசை-இரட்டைச் சுர வரிசை அலங்காரம் என்பனவும், 50 சஞ்சாரி கீதங்களும், 32 ஆதிதாள வர்ணங்களும், 10 அடதாள வர்ணங்களும், ஒரளவாக இலக்கண கீதம் சுரகதி, சதிசுரம் பிரபந்தம் முதலியவையும் சேர்க்கப் பெற்றுள்ளன. இதுவரை வேற்று மொழிகளில் வெளிவந்த புத்தகங்களில் 50 கீதங்கள். அடங்கிய புத்தகம் ஒன்றுமே யில்லை யென்பது குறிப்பிடத் தக்கது... ...இங்ங்னம், க. பொன்னையா பிள்ளை, 3-11-1943’. மூன்றாம் தொகுதி இதன் முதல் பகுதி: 1943. இரண்டாம் பதிப்பு:1960. அச்சு: பாண்டியன் அச்சகம், சிதம்பரம். மொத்தப் பாடல்கள் - 75. சுரதாளக் குறிப்பு: கோமதி சங்கர ஐயர். ஆசிரியர்கள்: நீலகண்டசிவன், டி. இலக்குமணப் பிள்ளை. கோபால கிருஷ்ண பாரதி, அச்சுத தாசர், வே.நா. பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகிய அறுவரின் கீர்த்தனங்களும் பதங்களும் இத்தொகுப்பில் உள்ளன. நான்காம் தொகுதி இற்றைக்கு 350 ஆண்டுகட்கு முன் தோன்றிய முத்துத் தாண்டவரின் பாடல் தொகுப்பு இது. மொத்தப் பாடல்கள் 60 கீர்த்தனங்களும் 25 பதங்களும். இசை: திருப்பாம்புரம் குழல் வித்துவான் டி.என். சாமிநாதப்பிள்ளை. முதல் பதிப்பு,