பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 581 1943; இரண்டாம் பதிப்பு 1955. அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு, ஐந்தாம் தொகுதி ஆசிரியர் பொன்னையாபிள்ளை. இரண்டு பாகம் கொண் டது. முதல் பாகம் இசையியல்: இரண்டாம் பாகம் - இசைக் கருவிகள். இதுபாடல் தொகுப்பன்று. இசையிலக்கண (Theory) நூலாகும். ஆறாம்தொகுதி நரிமணம் கோபால கிருஷ்ண பாரதியாரின் 89 உருப்படி கள் இத்தொகுப்பில் உள்ளன. சுர தாளக் குறிப்பு கோமதி சங்கர ஐயர். முதல் பதிப்பு 1940; இரண்டாம் பதிப்பு 1955. அச்சு யுனைடெட் பிரிண்டர்சு, திருச்சி. அ.ப.க.க.வெளியீடு. ஏழாம் தொகுதி பெரியசாமித் தூரன் பாடல்கள். இசை: சிவராம கிருஷ்ண பாரதி. எட்டாம் தொகுதி இராம நாடக இசைப் பாடல்கள் சிலவற்றின் தொகுப்பு இது. ஆசிரியர் : சீர்காழி அருணாசலக் கவிராயர், செப்பம்: மு. அருணாசலம் பிள்ளை. சுரதாளக் குறிப்பு கோம தி சங்கர ஐயர். ஆண்டு 1945. அண்ணாமலைப்பல்கலைக் கழக வெளியீடு. ஆசிரியர் வரலாறு: பிறந்த ஊர் தில்லையாடி ; பிறப்பு 1634விசய ஆண்டு; 67 ஆம் அகவையில் இறுதி. இத் தொகுப்பின் மொத்தப் பாடல்கள் 50. ஒன்பதாம் தொகுதி மொத்தப் பாடல்கள் 54. பதிப்பாண்டு 1945. அ.ப.க.க வெளியீடு. பாடல் ஆசிரியர்கள்: (1) தில்லை விடங்கன் மா. முத்தாப் பிள்ளை, (2) சேவற்குளம் கந்தசாமிப் புலவர், (3) நகரம் முத்து வீரப்பக் கவிராயர் ஆகிய மூவர். இசையமைத் தவர்கள்: திருப்பாம்புரம் டி.என். சாமிநாத பிள்ளை, டி.என். சிவசுப்பிரமணியப் பிள்ளை - ஆகிய இருவர், -