பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 தமிழ் நூல் தொகுப்புக்கலை ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்று உயர் திரு கோமதி சங்கர ஐயர் அவர்களைக் கண்டு கேட்டுப் பெற்றுக் குறிப்பு எடுத்துக் கொண்டேன். சங்கர ஐயருக்கு என் நன்றி மிகவும் உரியது. இசை யரங்குகளில் தெலுங்கிலும் சமசுகிருதத்திலுமே பாடுபவர்கட்கு அப்பாடல்கள் தேய்ந்த பாட்டையாகிவிட்டன: அதனால் அதிலேயே நடக்கின்றனர் போலும். தமிழிசைப் பாடல்களின் பக்கமும் அவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழ் நாட்டு இசையரங்குகளில், முக்கால் பங்கு தமிழாக இருக்க வேண்டும் - தமிழ் முதலில் பாடப்பட வேண்டும். எஞ்சிய கால் பங்கே பிற மொழிப் பாடல்கட்கு உரிய தாக்க வேண்டும். புரியாத மொழிகளில் கரடியாய்க் கத்துவதால் தமிழ் நாட்டுப் பொது மக்கட்கு யாது பயன். உள்ளது? இந்தப் பாடல்களை ஆரம்பித்ததுமே, வானொலிப் பெட்டியினையும் தொலைக் காட்சிப் பெட்டியினையும் பெரும்பாலான பொது மக்கள் மூடி விடுகின்றனர். எனவே, தமிழைப் புறக்கணிக்கா தீர்கள்-தமிழில் பாடுங்கள் என்று, பிற மொழிப் பாடகர்களின் கால்களில் விழுந்து வணங்கிக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். பிற மொழி மாயை அகலல் வேண்டும். இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களின் பாடல் திரட்டுகள் இருபதாம் நூற்றாண்டின் எழுச்சி மிக்க கவிஞர்களின் கவிதைத் த்ொகுப்புகளை இப்பகுதியில் காணலாம். வேறு தனித் தனித் தலைப்புகளில் கூறியுள்ள இருபதாம் நூற் றாண்டினர் அல்லாத மற்றவர்களைப் பற்றியது இப்பகுதி. எனக்குத் தெரிந்தவரைக்கும் இங்கே கூறுகிறேன்:- - கவியரங்கில் கலைஞர் - கலைஞர் மு. கருணாநிதி பல கவியரங்குகளில் கலந்து கொண்டு பாடிய பாடல்களின் தொகுப்பு இது. சென்னை