பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நூல் தொகுப்புக் கலை எந்தக் கலைக்கும் உரிய இலக்கணந்தானே! காலத்திற்கு ஏற்ப மாறுதல் பெற்று வளர்ந்து கொண்டே போனால்தானே "கலை" என்னும் பெயருக்கு உரியதாயிருக்க முடியும்? மாறுதல் பெறப்பெற மாடர்ன் ஆர்ட் (Modern Art) என்று சொல்லப் படுவதைக் காண்கிறோமல்லவா? காலம் போகப் போக, கிரீக் மொழியியல் பாடல்களே யன்றிச் சிறந்த உரைநடைப் பகுதிகளும் தொகை நூல்களில் சேர்க்கப்பட்டன. புலவர்கள் பலர் எழுதிய பல்வேறு செய்தி களின் தொகுப்புக்கள் எல்லாம் தொகை நூல்கள் ஆயின. குறிப்பிட்ட ஒரு மொழியைப் பற்றிய தொகுப்புக்கள், குறிப் பிட்ட ஒர் இலக்கியம் பற்றிய தொகுப்புக்கள்.அந்த இலக்கியத் திலிருந்து பிரித்தெடுத்த பகுதிகளின் தொகுப்புக்கள், குறிப் பிட்ட ஒரு நாட்டைப் பற்றிய தொகுப்புக்கள், குறிப்பிட்ட ஒரு காலத்தை-ஒரு நூற்றாண்டைச் சார்ந்த தொகுப்புக்கள், குறிப் பிட்ட ஒரு கருத்தை - ஒரு கொள்கையை-ஒரு பொருளை ஒரு தலைப்பைப் பற்றிய தொகுப்புக்கள், குறிப்பிட்ட ஒரு கலையை -ஒரு தொலைழி ஒரு துறையைப் பற்றிய தொகுப்புக்கள், மற் றும் இன்னபிற தொகுப்புக்கள் எல்லாம் தனித்தனித் தொகை நூல்களாக மதிக்கப் பெற்றன. அறிஞர் பல்லோரின் படைப் புக்கள் சேர்ந்த ஒரு தொகுப்பு ஒரு தொகை நூலாகக் கருதப் பட்டதல்லாமல், ஒரே ஒரு புலவர் பல்வேறு சமயத்தில் பல் வேறு பொருள்கள் பற்றிப் படைத்த பல பகுதிகளின் தொகுப் பும் ஒரு தொகை நூல் என்னும் மதிப்பைப் பெறலாயிற்று. இவ்வாறாக, கிரீக் மொழியில் நூல் தொகுப்புக்கலை. காலத்துக் குக் காலம், படிப்படியாகப் பல மாறுதல்கள் பெற்று வளர்ந்து வரலாயிற்று. இந்த வளர்ச்சி நிலையை, தமிழ் நூல் தொகுப் புக் கலை வளர்ச்சியோடு அடுத்த பகுதிகளில் ஒத்திட்டுப் பார்க்க வேண்டும். அதற்காகவே கிரீக் நூல் தொகுப்புக்கலை வளர்ச்சியைப் பற்றி ஈண்டு இவ்வளவு எழுத நேர்ந்தது. இனி, கிரீக் மொழியிலுள்ள தொகை நூல்கள் சிலவற்றைக் காண்போம். கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பத்தாம் நூற் றாண்டு வரையும்.ஏன்.அதற்கு மேலும் இயற்றப்பட்ட கிரீக்