பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/610

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


588 தமிழ்நூல் தொகுப்புக் கலை முதல் பதிப்புக்கு 1951-இல் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியாரும், இரண்டாம் பதிப்புக்கு 1952 - இல் கி.வா. ஐகந்நாதனும் மதிப்புரை தந்துள்ளனர். அடுத்த பதிப்பு-1955, சோமேசத் திரட்டு - ஆ-சோமப் பெருமாள் சாமி. பதிப்பு-சேலம் ஆத்தூர் அ.சி. இராமசாமி நாய்க்கர், குமரன் பிரஸ், மதுரை. மதுரை வீர சோமசுந்தர சுவாமிகள் மீது பாடிய மூன்று நூல்களின் திரட்டு. நூல்கள்: சோமேச நெஞ்சு விடுதூது, சோமேசநாதர் தசாங்கம், சோமேச நாதர் உலா. - கம்பதாசன் பாடல்கள் கம்பதாசன் ஒர் இயற்கைக் கவிஞர்.அவர் கவிதை நூல்கள் சிலவற்றைக் காணலாம். கனவு முதலிய கவிதைகள் ஆசிரியர் கம்பதாசன். வெளியீடு-ஹரீந்திரநாத் சுனிதா கலா மண்டலி, மைலாப்பூர், சென்ன்ை. முன்னுரை-ஹரீந்திர நாத் சட்டோபாத்தியாயற - 9.6.1941 உள்ளுறை: கனவு, தேசம், இயற்கை, காதல்-இவை பெரிய தலைப்புகள்- பல உள் தலைப்புகள் உண்டு. கனவு என்னும் தலைப்பில் உள்ளவை இசைப் பாடல்கள். - கம்பதாசன் கவிதைகள் - அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17. 1960. உள்ளுறை: காவியங்கள், இயற்கையின் எழில், காதல் கவிதைகள், தொழி லாளர் உலகம், நாடும் மொழியும், பல் வகை இசைப் பாடல் கள் உள்ளன. - - முடியரசன் கவிதைகள் தொகுப்பு-தமிழண்ணல். பாரி நிலையம், சென்னை. இரண்டாம் பதிப்பு-1961. முடியரசன் கவிதைகள் 1955-இல் இரு தொகுதிகளாக வெளிவந்தன, பின்பு மேலும் சில சேர்த்து இரு தொகுதிகளையும் ஒன்றாக்கி இப்பதிப்பு வெளியிட்டுள்ள ன ர்,