பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 37 பாடல்கள் பல நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன அவற்றுள் முதல் தொகை நூல் கார்லண்ட் ஆஃப் மெலீகர் (Garland of Meleager of Gadara) என்பதாகும். இங்கே சொல்லப்படும் தொகை நூல்கள் கிரீக் நூல்களாயினும், அவற்றைக் கிரீக் எழுத் துக்களாலும் ஒலிப்பு முறையாலும் ஈண்டுக் குறிப்பிடுவதும் அச்சிடுவதும் கடினம் என்பது ஒரு புறமிருக்க, கிரீக் எழுத்துக் களை உரிய ஒலிப்புடன் கூட்டிப் படிப்பதும் பலருக்கும் கடின மாதலின், கிரீக் தொகை நூல்கள் ஈண்டு ஆங்கில எழுத்துக் களாலும் ஆங்கில ஒலிப்பு முறையாலுமே குறிப்பிடப்படும். இந்த அடிப்படையிலேயே 'Garland of Meleagar என்று கால் (5 fő husti–Lil il-QsirsTg. “Garland of Meleagar” argir mirdi, “Quds? கர் என்னும் அறிஞர் தொகுத்த (தொடுத்த) மாலை என்று பொருளாம். இவர் இந்த நூலை கி.மு. 60-ஆம் ஆண்டளவில் தொகுத்தார் என்று ஒரு சாராரும், கி.மு. 90-ஆம் ஆண்டள வில் தொகுத்தாரென்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். எனினும், கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் தொகுத் தார் என்று ஒரு பொது முடிவு கூறுபவரும் உளர். சிரியாவில் வாழ்ந்த மெலீகர், கிரேக்கத் தத்துவ அறிஞரும் பெரும் பாவலருமாவார். இவர் தாம் இயற்றிய பாடல்கள் சிலவற்றை யும், தமக்கு அண்மைக் காலத்தில் வாழ்ந்த கிரேக்கப் புலவர் கள் நாற்பத்தறுவரின் பாடல்கள் பலவற்றையும் தொகுத்து இந்நூலை உருவாக்கினார். புலவர் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவகைப் பூவோடு ஒப்பிட்டுக் காட்டி நூலின் பெயருக்குப் பொருத்தம் தேடி யுள்ளார் மெலீகர். இந்நூற் பாடல்கள் கடவுளர்கள், புகழ் பெற்ற அரசர்கள் - வள்ளல்கள் - அறிஞர்கள் முதலிய பெரி யோர்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகிய பொருள்கள் பற்றிய வையாகும். ஆழ்ந்த பொருளும் இனிய நயமும் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் பான்மையும் அமைந்தவை இப் பாடல்கள், இங்ங்ணம் சிறந்த புலவர்களின் பாடல்களையே மெலீகர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்நூற் புலவர்களுள் மாதிரிக்காக ஐவர் பெயர்கள் வரு Lorrgy: – Archilochus, Alcaeus,Anacreen, Simonides, Sappho