பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/622

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


600 தமிழ்நூல் தொகுப்புக் கலை கிலும் கல்லூரிக் கவியரங்கிலும் பல இதழ்களிலும் வந்த பாடல்கள். அன்பு வெள்ளம் முதல் என் ஞான குரு வரை 19 தலைப்புகளில் பல பாடல்கள் உள்ளன. புது மலர் ஆ - புலவர் திருவரசன். புது இலக்கியப் பதிப்பகம் சென்னை. பாரதி பிரின்டர்ஸ், சென்னை. 1969. புதுமலர் முதல் புறம் காட்டும் அறம் வரை 30 தலைப்பில் பல பாடல் கள். வாசுதேவன் கவிதைகள் ஆ-கவிஞர் திருச்சி.வாசு தேவன். வெ-திருமகள் நூலகம், சென்னை. திருமலைத் தெய்வம் ஆர்ட் பிரின்டர்ஸ், சென்னை. ஏப்ரல், 1982. உ-கதிரவன் முதல் எப்படிப் புகழ்வேன் என்பது வரை 43 தலைப்புகளில் பாடல்கள் பல உள்ளன. இறுதியில், மன்னிப்பு, அரசியின் அன்பு, சிலையின் விலை என்னும் மூன்று சிறு நாடகங்கள் உள்ளன. . வாசுதேவன், சிந்தனை அலைகள், கறுப்பு வைரம், பாலர் பாடல்கள், பாலர் கதைப் பாடல்கள், செந்தமிழ் இசைத் தென்றல்-என்னும் கவிதைத் தொகுப்பு நூல்களும் இயற்றி யுள்ளார். - புதுச்சேரி நூல்கள் புதுச்சேரிப் பாவலர்களின் பாடல் தொகுப்பு நூல்களைப் பற்றி எனக்குத் தெரிந்த வரைக்கும் இந்தப் பகுதியில் தருகி றேன். என் பார்வைக்கு வராத - அறிமுகம் ஆகாத புதுவைத் தொகுப்புகள் இன்னும் பல உள்ளன. வேறு தலைப்புகளில் கூறப்பட்டுள்ளவர் அல்லாத மற்றையோரே இங்கே இடம் பெற்றுள்ளனர். தமிழ் இசைப் பாடல்கள் ஆ-புதுவைச் சிவம் என்னும் ச. சிவப்பிரகாசம். வெ. - ஞாயிறு. நூற் பதிப்புக் கழகம். 1950. உ-நாட்டுப் பகுதி, தமிழ் மொழிப் பகுதி, சிந்தனைப் பகுதி, சாதி பேதப் பகுதி, காதல் மண் ப் பகுதி, திருக்குறள் பகுதி, கடமைப் பகுதி என்னும் ஏழு பகுதிகளின் கீழ்ப் பாடல்கள் தரப்பட்டுள்ளன. -