பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/626

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


604 தமிழ்நூல் தொகுப்புக் கலை என்பது பாடல். காலத்திற்கேற்ற கருத்துகளை எளிய இனிய வழியில் பரப்புதற்கு ஏற்றது இந்தத் தொகுப்பு. பாடித்தான் பாருங்களேன் - ஆ-இ. பட்டாபிராமன், புதுச்சேரி. வெ.முத்துப்பதிப்பகம், விழுப்புரம், கோமதி அச்சகம், சென்னை, 1985. உ--தமிழா விழித்தெழு, சமுதாய ஒற்றுமை, வருமுன் காப்போம், அமரர் அன்னை இந்திராவுக்கு அஞ்சலி-ஆகிய பெரிய தலைப்புகளின் கீழ்ப் பாடல்கள் உள்ளன. குழந்தைப் பாடல்கள் குழந்தைக் கவிஞர்கள் குழந்தைகட்காக எழுதியுள்ள பாடல் தொகுதிகள் சில காணலாம். மலரும் உள்ளம் ஆசிரியர் அழ. வள்ளியப்பா. வெளியீடு - பாரி நிலையம், சென்னை - முதல் பதிப்பு:1954. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளி யப்பா 1944 இல் 23 பாடல்களுடன் மலரும் உள்ளம் என்ற பெயரில் ஒரு தொகுப்பு வெளியிட்டார். பின்னர், பல இதழ் களில் வந்த பல பாடல்கள் சிறு சிறு வெளியீடுகள் - ஆகியவை யும் சேர்க்கப்பட, இந்தப் பெரிய தொகுப்பு உருவாயிற்று. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் 1954 - மே - 6 ஆம் நாள் நடைபெற்றது. இதில் ஐந்து பெரும் பகுதிகளும் பல உட்பிரிவுகளும் உள்ளன. மலரும் உள்ளங்களாகிய குழந்தைச் சிறார்கட்கு ஏற்ற வேடிக்கைப் பாடல்கள், கதைப்பாடல்கள், சுதந்திரம் பிறந்த கதை முதலியன உள்ளன. குழந்தைக் குரல் - இது பாப்பாமலர். ஆ அழ. வள்ளியப்பா. வெ. இராம விலாஸ், இராயவரம், புதுக்கோட்டை ஸ்டேட். மதராஸ் ரிப்பன் பிரஸ், இராமச்சந்திர புரம், 1947. கலைமகள் முதல் ரேஷன் காலத்துச் சாமியார் வரை 38 தலைப்புகளில் படங் களுடன் பாடல்கள் உள் ளன.