பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/636

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


614 தமிழ்நூல் தொகுப்புக் கலை -இப்பெரிய தலைப்பின் கீழ், ஆனை முதல் வானவில் வரை 9 தலைப்புகளில் பாடல்கள் உள. 'விளையாட்டுப் பாடல்கள்' என்னும் பெரிய தலைப்பின் கீழ், துப்பாக்கி முதல் கூட்டாஞ் சோறுவரை 9 தலைப்புகள். அறிவுரைப் பாடல்கள்' என்னும் பெரியதலைப்பின் கீழ் சிரி பாப்பா முதல் பறவை வரை 11 தலைப்புகள். கதைப்பாடல்கள்’ என்னும் பெரிய தலைப்பின் கீழ்எலிகள் கொண்டாட்டம் முதல் தந்தைக்குப் பாடம் வரை 11 தலைப்புகள், பாடல்கள் பொருத்தமான படங்களுடன் பெரிய எழுத்தில் உள்ளன. சின்ன பாப்பா . ஆ - வெ-பாவலரேறு தமிழவேள், புதுச்சேரி. தமிழ்ச் செல்வி அச்சகம், புதுச்சேரி. 1964. உ. சின்ன பாப்பா முதல் 'மதிப்புவரை வரை 20 தலைப்புகளில் சிறார்க்கு ஏற்ற கவிதை கள் உள்ளன. இசைத்தேன். சிறுவர் பாடல். ஆ-வை: கூத்தன், புதுச்சேரி. சரசுவதி பதிப்பகம், புதுச்சேரி - சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுச்சேரி: 1968. உ-இயற்கை, பறவை, விலங்கு, பெரியார், அறவுரை என்னும் பெரிய தலைப்பின் கீழ், நிலா முதல் கும்மி விளை யாட்டு ஈறாாக 25 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. அறிவியல் இலக்கிய்ம் ஆ-கவிஞர் தமிழ் இயக்கன். வி.உ-நியூ செஞ்சுரி புக்' ஹவுல், சென்னை. கோமதி அச்சகம், சென்னை. திசம்பர்-1985, வெ-குறிஞ்சிப் பதிப்பகம், புதுச்சேரி. உ-உலகம் என்பது முதல் நாள் பிறந்த கதை என்பது வரை 25 தலைப்புகளில் சிறார்க்கு, ஏற்ற பாடல்கள் உள்ளன. பாடல்கள் அனைத்தும், சிறார்க்கு அறிவியலை எளிய முறையில் அறிவிப்பன வாகும். படங் களும் உள்ளன. குழந்தைப் பாடல்கள் என்னும் தலைப்பைத் தொடர்ந்து குழந்தைகள் தொடர்பான தால்ாட்டுப் பாடல்களைக் காண் பாம்,