பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/637

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு 615 தாலாட்டுப் பாடல்கள் வாழ்க்கையில்-குழந்தைப் பருவத்தில் முதலில் கேட்கும் பாடல், தாயின்வழி வரும் தாலாட்டுப் பாடல் ஆகும், தால் என்றால் நாக்கு. நாக்கை ஒரு விதமாக ஆட்டிப் பாடும் பாடல் தாலாட்டுப் பாடல். அப்பாடல்களைச் சிலர் தொகுத்தனர். சில காண்பாம்: தாலாட்டுப் பிரபந்தம் புலவர்கள் பலர் பாடிய தாலாட்டுப் பாடல் நூல்களின் தொகுப்பு இது. சென்னை ரிப்பன் அச்சியந்திர சாலை. 1908, உள்ளுறை: நூல் பெயரும் ஆசிரியர் பெயரும் மொத்தப் பாடல் எண்ணிக்கையுடன் வருமாறு,-மொத்தத் தாலாட்டு நூல்கள்-12, 1. சீதா சாரத் தாலாட்டு - திரு வேங்கடநாதர்-108. 2. திருத் தாலாட்டு-தத்துவ ராய சுவாமிகள் - 51. 3. சிவ ஞான. பாலைய் சுவாமிகள் தாலாட்டு - சிவப்பிரகாச சுவாமிகள் - 100 4. சிதம்பர சுவாமிகள் தாலாட்டு -சிதம்பர சுவாமிகள் - 41. 5. பெருமாள் தாலாட்டு அல்லது பூரீ ராமர் தாலாட்டு - 31. 6. திருப் பரங்கிரிக் குமரவேள் தாலாட்டு திரு எவ்வுளுர் இராமசாமி செட்டியார் - 151. 7. ஆண்பிள்ளைத் தாலாட்டு - மேல் ஆசிரியரே - 59. பெண் பிள்ளைத் தாலாட்டு - மேல் ஆசிரியரே - 34. 9. மத்தியார்ச்சுனம் ஏகநாயகர் தாலாட்டு உ.வே. சாமிநாத ஐயர் - 30. 10. சங்கர பகவத் பாத சுவாமிகள் திருத்தாலாட்டு அச்சுதானந்த சுவாமிகள் - 21. " – 11. சீர்காழிச் சிற்றம்பல நாடிகள் தாலாட்டு - 63. 12. திருஞானசம்பந்தர் திருத்தாலாட்டு. காஞ்சி சபாபதி முதலியார் 41 - என்பன வாகும்.