பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/639

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. நான்கு காலம்-1 பல்வேறு வகைப் பாடல் திரட்டுகள் தனிப் பாடல் திரட்டுகள், இறைவணக்கப் (தோத்திரப்) பாடல்கள் திரட்டு, சிற்றிலக்கியத் திரட்டுகள் என்னும் தலைப்புகளில் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள நூல்கள் போல் இன்றி, வேறு வகையான திரட்டு நூல்கள் இத்தலைப் பில் இடம் பெற்றுள்ளன. - இந்தத் தலைப்பில் உள்ளவை:- பல பெரிய நூல்களி லிருந்து திரட்டப்பட்ட பாடல்களின் தொகுப்பு நூல்கள், புலவர்கள் மன்னர்கள் ஆகியோரின் வரலாற்றுத் திரட்டுநூல் கள், கடவுள் நூல்கள் - தத்துவ நூல்கள் - சோதிட நூல்கள் - மருத்துவ நூல்கள்-மந்திர நூல்கள்- வசிய நூல்கள்-முதலிய வற்றிலிருந்து திரட்டிய பாடல்களின் தொகுப்பு நூல்கள், கதைப் பாட்டு நூல்கள், சுகாதாரம் - சீர்திருத்தம் - நீதி - கூட் டுறவு - முதலியவை பற்றிய நூல்கள், மொழிபெயர்ப்பு நூல் கள், செய்கைப் பாடல் நூல்கள், பரிசுப்பா நூல்கள், அறிவுப் பாடல் நூல்கள்,சாசனப்பா நூல்கள் - முதலியன் தொடர்பான திரட்டு நூல்கள், தனியார் பல பொருள்கள் பற்றிப் பாடியுள்ள பாடல்களின் தொகுப்பு நூல்கள் - முதலியன இந்தப் பெரிய தலைப்பில் இடம்பெற்றுள்ளன. மற்றும், முற்காலம், இடைக்காலம், பிற்காலம், இருபதாம் நூற்றாண்டு ஆகிய நான்கு காலத்து நூல்களிலிருந்தும் பாடல் கள் எடுக்கப்பட்ட திரட்டு நூல்கள் இந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளன என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது. இனி நூல்கள் வருமாறு:- - பன்னூல் திரட்டு தொகுப்பு: பாண்டித்துரைத் தேவர். எஸ்.பி.ஜி. இண்டஸ் டிரியல் அச்சுக் கூடம், இராமநாதபுரம், முதல் பதிப்பு - 1898, இது அறத்துப்பால், பொருட்பால் என்னும் இருபாகங்கள் உடையது; கடவுள் வாழ்த்து முதலாகக் கற்பனை ஈறாக 54 அதிகாரங்கள் கொண்டது. மொத்தப் பாடல்கள் 1647.