பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 39 கலையைக் குறிக்கும் ஆந்தாலஜி (Anthology) என்னும் சொல் லுக்கு முதல் அடிப்படையாகிய "ஆந்தொலொழிகா” என்னும் சொல்லை, ஒரு கிரேக்கத் தொகை நூலுக்குப் பெயராக முதல்முதல் வைத்தவர் இவரே. எனவே, தியாழெனியானுஸ் என்பவரை, ஆந்தாலஜி என்னும் கலைச்சொற்பெயரின் தந்தையாகக் குறிப்பிடலாம். மேற்கூறிய மூன்று தொகைநூற் களுமே, பாடல்களின் முதல் சொற்களின் முதல் எழுத்துக் களை அகவரிசையில் அமைத்துத் தொகுக்கப்பட்டவையாகும். அஃதாவது, நூலுக்கு முன்னோ பின்னோ செய்யுள் முதற் குறிப்பு அகர வரிசை தனியாக அமைக்கத் தேவையில்லாமல் அந்த அகரவரிசை நூலோடு நூலாக-நூலுக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நமக்கு ஒர் உண்மை புலப் படலாம்; அதாவது-பாடல்கள் ஆசிரியர் வாரியாகவோ, அல்லது பொருள் (Subject) வாரியாகவோ, அல்லது வேறு எந்த முறையாகவோ ஒழுங்குபடுத்தி அமைக்கப்படவில்லை; அகர வரிசை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கண்டபடி அமைக்கப்பட்டுள்ளன-என்பதுதான் அந்த உண்மை. நான்காவது கிரீக் தொகை நூலாக, கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் ஸ்ட்ராடன்' (Straton of Sardis) என்பவர் தன்னொத்த பாலினத்தார் மாட்டுக் கொள்ளுங் காதல் Lurrl-6569673 QA5rt (5 #57 ff (Anthology of homo-sexual) epigrams), இந்நூல், தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்குத் தரக் குறை வானதாகத் தோன்றுகிறதன்றோ? ழுஸ்தினியன் (lnstinian) என்னும் அரசன் காலத்தில் (கி.பி.483-565). பல காதல் பாடல்கள். தமிழ் அகப்பொருள் நூலில் உள்ளதுபோலப் பல துறைகளாகப் பகுத்துப் பெய ரிடப்பட்டு ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டன. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் (கி.பி.570) அகத்தியஸ் (Agathias) என்பவர், முதல்முதலாகப் பொருள் (Subject) வாரியாகப் பாடல்களைப் பாகுபாடுசெய்து அமைத்து ஒரு தொகைநூல் உருவாக்கினார், இந்த நூலின் பெயர், Circle of Agathias என்பதாகும். இவர் தம் பாடல்களுடன் பிற புலவர்களின் பாடல்களையும் இந்நூலில் தொகுத்தார். இது,