பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/640

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


618 - தமிழ்நூல் தொகுப்புக் கலை இரண்டாம் பதிப்பு: 27.8-1906. மொத்தப் பாடல்கள் 2132. முதலிரண்டு பதிப்புகட்குப் பாண்டித்துரைத் தேவரே பதிப்புரை எழுதியுள்ளார். மூன்றாம் பதிப்புக்கு நாராயணையங் கார் பொறுப்பேற்றார். மொத்தச் செய்யுள்-2013. நாராய ணையங்கார், மூன்றாம் பதிப்பில், இரண்டாம் பதிப்பில் மறித்து வந்த சில பாடல்களையும் இன்பச் சிறப்பு என்னும் அதி. காரத்தையும் நீக்கினாராம். இவரே பதிப்புரை எழுதினார். பன்னூல் திரட்டின் நான்காம் பதிப்பு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 5 ஆம் வெளியீடாக வந்தது. மதுரை முத்திரா சாலை அச்சகத்தில் அச்சிடப்பட்டது. சு.அரிகர ஐயர் பதிப்புப் பொறுப்பேற்றார். பதிப்புரை நாள்: 28-12-1930. மொத்தச் செய்யுள்-2073. இதில் அறம் பொருளோடு காமத்துப் பாலும் இடம் பெற்றுள்ளது. பாடல்கள் தந்த நூல்க ČITIT GlJ Göт : புறத்திரட்டுத் தொகுப்பால் அறியப்பட்ட வளையாபதி, குண்டல கேசி, நாரத சரிதை, மேரு மந்தர புராணம், பெருந் தேவனார். பாரதம், சாந்தி புராணம், பெரும் பொருள் விளக்கம் முதலிய நூல்களிலிருந்து சிற்சில பாடல்கள்: சிவப் பிரகாசப் பெருந்திரட்டு-குறுந்திரட்டு நூல்களிலிருந்து சிற்சில பாடல்கள். மேலும் முற்கால-இடைக்கால-பிற்கால நூல்களி லிருந்து சிற்சில பாடல்கள்-ஆகியவை திரட்டப்பட்டுள்ளன. உ.வே. சாமிநாத ஐயரும், வீர.லெ. சிந்நயச்செட்டியாரும் சாற்று கவிகள் அளித்துள்ளனர். - பாண்டித்துரைத் தேவர், மேற்கூறிய பெரிய திரட்டே யன்றி, 69 பாடல்கள் கொண்ட பன்னூல் திரட்டு’ என்னும் நூல் ஒன்றும் தொகுத்துள்ளார். இது, மதுரைத் தமிழச் சங்கத் தால், தமிழ்ச்சங்கம் பவர் பிரசில் 1908 ஆம் ஆண்டு, அச்சிடப் பட்டது. - - பன்னூல் பாடல் திரட்டு தொகுப்பு, அ.அ.இ.சா. புலவர் கழகம். குறிப்புரை: தி. சங்குப்புலவர். 1968. மொத்தப் பாடல்கள் 2925. பல நூல் களிலிருந்து எடுத்த பாடல்களின் திரட்டு,