பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/642

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


620 தமிழ்நூல் தொகுப்புக் கலை பொறித்த பாடல்களும் கிடைத்தவரையும் திரட்டிச் சேர்த் துள்ளதாக முகவுரை ஆசிரியர் கூறியுள்ளார். விவேக சிந்தாமணி தொகை-தொகுப்பு என்பதைக் குறிக்கும் பெயர்களுள் தொடை, கொத்து, கோவை, மாலை, மஞ்சரி முதலியன போலச் சிந்தாமணி என்பதும் ஒன்றாகும். எனவே, இந்த நூல் விவேகமான - அறிவு சார்ந்த பல பாடல்களின் தொகுப்பு என்பதை நூற்பெயரால் அறியலாம். பல நூல்களிலிருந்து எடுக்கப்பெற்ற பாடல்களும் சில தனிப் பாடல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நகை, பெருமிதம், காதல், நீதி முதலிய பல பொருள்கள் பற்றிய பாடல்கள் அமைந்து இந்நூலைச் சுவையுடைய தாக்கியுள்ளன. நூலுக்கு உரையும் உண்டு. ஆனால் தொகுத்தவர் பெயரும் உரையாசிரியர் பெயரும் அறியப்படவில்லை. இந்நூலைப் பலர் பதிப்பித்துள்ளனர். விவேக சிந்தாமணித் திரட்டு வெளியீடு- குப்புசாமி நாயுடு, மருதண்ணராவுத்தர். திருச் சிற்றம்பல விலாசம் பிரஸ், சென்னை. 1900. பல நூல் களிலிருந்து திரட்டிய பாடல்களின் தொகுப்பு, விவேக சிந்தாமணி வெளியீடு - தாராபுரம் முத்துசாமி நாயுடு. சாமுண்டீசுவரி அச்சுக் கூடம், தாராபுரம். 1909. உலகியல் ஒழுக்கங்களை எடுத்துக் கூறும் பல நீதிப் பாடல்களின் தொகுப்பு. உரை உண்டு. உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. இவ்வெளியீடு முதல் பாகம். பெரிய விவேக சிந்தாமணி முதல்-தொகுதி. 367 பாடல்கள் கொண்டது. வெளியீடு - தொ. நமசிவாயம் பிள்ள்ை, மாயூரம். மட்டு வார் குழலாம்பாள் அச்சுக் கூடம், சென்னை: 1899. மற்றவர் பதிப்பித்துள்ள விவேக சிந்தாமணிப் பாடல்களுடன் மேலும் பல பாடல்களை நமசிவாயம் பிள்ளை இணைத்துள்ளார்.