பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/643

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் - 621 விவேக சிந்தாமணி இப்படி யொரு பதிப்பு பார்வைக்குக் கிடைத்தது. 101 பாடல்கள் உள்ளன. முன் பகுதி யின்மையால், வெளியீட்டா ளர், ஆண்டு முதலிய விவரங்கள் தெரியவில்லை. விவேக சிந்தாமணி வெளியீடு - சென்னை பூமகள் பிரசுரம். பூமகள் விலாச அச்சுக் கூடம், சென்னை - 1930. பல பொருள் பற்றியது - பல இனப் பாக்கள் கொண்டது. மொத்தப் பாடல்கள் - 137. விவேக சிந்தாமணி ( - மூலமும் உரையும் -) வெளியீடு - பூரீமகள் கம்பெனி, 122, வரதா முத்தியப்பன் தெரு, சென்னை-1. ரீமகள் அச்சகம், சென்னை-1. திருந்திய சுத்தப் பதிப்பு-ஏப், 57. பதிப்பாளர்களின் குறிப்பு வருமாறு: குறிப்பு - விவேக சிந்தாமணி மூலமும் உரையும்-என்னும் இந்நூல் முழுவதையும் ஒருங்கே சரிபார்த்து, திருத்தங்களோடு சுத்தப் பதிப்பாக வெளியிட்டிருக்கின்றோம். இதனைப் பிழை நீக்கம் செய்து கொடுத்த வித்துவான் ஈக்காடு சபாபதி முதலியாருக்கு எங்கள் உள்ளங் கனிந்த நன்றி-பதிப்பாளர்கள். என்னிடம் உள்ள இந்தப் பதிப்பின் இறுதிப் பக்கங்கள் இல்லை. 126 பாடல்கள் உள்ளன. மேலும் சில பாடல்கள் இருக்கலாம். விவேக சிந்தாமணி வெளியீடு-சைவ சித்தாந்த நாற்பதிப்புக் கழகம், சென்னை -1. இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளனர். முதல் பாகத்தில் 135 பாடல்களும் இரண்டாம் பாகத்தில் 100 பாடல்களும் உள்ளன. ®555 தொகுப்பின் அருமைக்கு அகச் சான்றாக, என்னிடமுள்ள பதிப்பின் முதல் செய்யுள் வருமாறு: