பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/658

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


636 தமிழ் நூல் தொகுப்புக் கல்ை யார் புராணம் (வசனம்)' என்ற தலைப்பில் உரைநடை வரலாறு தரப்பெற்றுள்ளது. இந்நூலுக்குத் தம்பி-புருஷோத்தமப் பிள்ளை பொருத்த மான முகவுரை எழுதியுள்ளார். முகவுரையின் இறுதியில், "நெடுநாளாகத் தமிழ் நூற்கட் பலவற்றிலுஞ் சொன்னயம் பொருணயம் முதலிய வழக்கு நிரம்பி மலிந்துகிடக்கும் அருஞ் செய்யுட்களிற் சிலவற்றை யெடுத்து, இயன்ற வரையிற் புராணிகர் கருத்தொடு பொருத்தி, ஒரு நூலாகத் தொகுக்க லாயினேன்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு, புதுவை மகாவித்துவான் பு.அ. பெரியசாமிப் பிள்ளையும், தமிழ் வல்லுநர் சி. பங்காரு பத் தரும் செய்யுள் வடிவில் சிறந்த மதிப்புரைகள் அளித்துள்ளனர். கடை திறப்பு ஆ-கவிஞர் முருகு சுந்தரம். சேலம் பதிப்பகம், சேலம். 1964. பாரதம் பிரஸ், சென்னை. இந்நூல் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள், கடிதங்கள், கட்டுரைகள் ஆகிய வற்றின் கவிதை வடிவங்கள். இம்முறையில் ஒரு கவிதைத் தொகுப்பு தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை' - என ஆசிரியர் முன்னுரையின் முதல் பத்தியில் கூறியுள்ளார். உள்ளுறை:- இதில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதி "நாக்கு நாடகங்கள்’ என்பது. இதன் உள்தலைப்பு எட்டு. சாக்ரடீசு, சகுந்தலை, ஒதெல்லோ, இங்கர் சால், கென்னடி, பெரியார். அண்ணா, கருணாநிதி ஆகிய எண்மரின் சொற் பொழிவுகள் கவிதை வடிவில் உள்ளன. நாக்கால் பேசும் சொற்பொழிவுகள் பற்றிய தாதலின் நாக்கு நாடகங்கள்' என்னும் பெயர் தரப்பட்டது போலும். இரண்டாம் பகுதி எண்ணத் தேர்கள்’ என்பது. இதன் உள்தலைப்பு ஐந்து. ம்ாதவி, பிரெஞ்சுக்காரி ஹெலாய், கவிஞன் பைரன், நெப்போலியன் ஆகியோரின் ஒவ்வொரு கடிதமும், முல்லை என்பாளின் மூன்று கடிதங்களும் கவிதை வடிவம் பெற்றுள்ளன. ஆக ஐந்து தலைப்புகளில் ஏழு கடிதங் கள் இடம் பெற்றுள்ளன.