பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 637 மூன்றாம் பகுதி - உள்ளத்துடிப்புகள்’ என்பது. இதன் உள்தலைப்பு இரண்டு. இதில், லெனின் கட்டுரையும் நேரு கட்டுரையும் கவிதை உருவம் பெற்றுள்ளன. மக்களின் அறிவுக்கடை வாயிலை இப்பகுதிகள் திறப்ப தால், இத்தொகுப்புக்குக் கடை திறப்பு என்னும் பெயர் தரப்பட்டதோ - என்னவோ - தெரியவில்லை. புலிப் பாணி முனிவர் பலதிரட்டு நூறு ஆ - புவிப்பாணி முனிவர். தமிழக அரசு ஒலைச்சுவடி நூலகத்தின் 942 என்னும் எண் உள்ள சுவடி இது. உ-வசியம், மரணம், வித்து வேடணம், திருடர்களைப் பிடித்தல், சொக்குப் பொடி, புருட வசியம், பெண்கள் வசியம் - முதலியன இதில் கூறப்பட்டுள்ளன. இவர் இயற்றியுள்ள நூல்களின் கோவை புணர்த்தும் சில செய்யுட்கள் இறுதியில் உள்ளன. தமிழ் இலக்கியத் திரட்டு . எஸ். பவாநந்தம் பிள்ளை பல நூல்களிலிருந்து திரட்டி யது. மாக்மில்லன் & கோ, சென்னை. முதல் பதிப்பு-1918, இரண்டாம் பதிப்பு-1920, மூன்றாம் பதிப்பு-1925. குறிப்புரை உண்டு. பாகவதத் திரட்டு ஆ - அ. இராமசுவாமிகள் ஜீவ ரட்சா அச்சுக்கூடம், சென்னை. 1886, உ - பரமாத்ம லட்சணம், ஞான லட்சனம் முதலிய 22 தலைப்புகளில் 188 பாடல்கள் உள்ளன. இன்ப ரசக் கோர்வை - ஆ - சிறு மணவூர் முனிசாமிக் கவிஞர். சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1909. மருத்துவம், கடவுள் முதலிய பல தலைப்புகளில் பல்வேறு இனப் பாடல்கள் - சந்தப் பாடல் கள் உள்ளன. பெரிய தொகுப்பு - பெரிய நூல், கோவை என்பதற்குப் பதில் கோர்வை' என்னும் சொல்லாட்சி உள்ளது. மிகவும் பழைய தாளில் நூல் உள்ளது. செய்யுட் கோவை ஆ - தி. இலட்சுமணக் கவிஞர். திருவனந்த புரம்