பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/661

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 63% சாலை, மதுரை. 1913. பல சமயம் பாடிய நீதிப் பாடல்களின் தொகுப்பு என ஆசிரியர் முன்னுரையில் கூறியுள்ளார். நூல் 20 அதிகாரங்களாக அமைக்கப்பட்டுள்ளது. பன்னூற்றிரட்டு - இது தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் உள்ளது. பல நூல்களிலிருந்து எடுத்த பாக்களின் திரட்டு இது..."இதில் கம்ப ராமாயணம், வில்லி பாரதம், புறநானூறு, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, திருக்குறள், பழமொழி, நாலடியார், பட்டினத்தார் பாடல், நைடதம் முதலிய பல நூல்களினின் றும் தேர்ந்தெடுத்துத் திரட்டப்பட்ட செய்யுட்கள் இருக் கின்றன. சிதலமாயிருக்கிறது” - என்று இந்நூலகத் தமிழ்ப் பட்டிகை முதல் தொகுதி 278 ஆம் பக்கத்தில் விவரிக்கப்பட் டுள்ளது. நேரில் கண்டபோது, பல நூல்கட் குரிய ஒற்றை யேடுகளை யொன்றாகச் சேர்த்துப் பன்னூற் றிரட்டு எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள தெனத் தெரிந்தேன். - S. வையாபுரி. இவ்விதமாக S. வையாபுரிப் பிள்ளை எழுதியுள்ளார். தமிழ்ச் செய்யுட் கலம்பகம் - மேனாட்டார் தமிழ் கற்பதற்காக ஜி.யு.போப் பல நூல் களிலிருந்து திரட்டிய பாக்கள். பாடல்கள் - 612, இரண்டாம் பதிப்பு - 1859. கல்வி, புல்லறி வாண்மை போன்ற பல தலைப்புகளின் கீழ்ப் பாடல்கள் உள்ளன. - சைவ மஞ்சரி தொ - பாண்டித் துரைத் தேவர். சிவதருமோத்தரம், அருணகிரி புராணம் முதலியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட 1316 பாடல்கள் தொகுப்பு இது. கடவுள் வாழ்த்து முதல் ஒழிபு ஈறாக 19 அதிகாரங்களாக இந்நூல் பகுப்புசெய்து தொகுக்கப் பட்டுள்ளது. சிதம்பரனார் சீர்திருத்தப் பாடல் முதல் பாகம் பதிப்பாசிரியர் - எஸ்.சி. சிவ காமு, குடந்தை. அறிவுக் கொடி வெளியீடு, அறிவுக் கொடி பதிப்பகம், குடந்தை. 1938. வ.உ. சிதரம்பரனார் பழமையைச் சாடிப் பாடிய சீர்த்திருத்தப்