பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/665

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 643 உரையும் உண்டு. வெளியீடு பாரி நிலையம், சென்னை. சாது அச்சுக்கூடம், சென்னை, முதல் பதிப்பு: இராட்சச-ஆவணி-3 ஆம் நாள். மூன்றாம் பதிப்பு 1956. வ.உ. சிதம்பரனார் கண்ணனூர்ச் சிறையில் இருந்தகாலை மற்ற கைதிகளுக்கு மெய்யறிவு கொளுத்தப் பல பாடல்கள், அவ்வப்போது இயற்றித் தந்து மனப்பாடம் செய்ய வைத் தாராம். சிறுகச் சிறுகப் பாடல்களை இயற்றி நூறுவரை கொண்டுவந்துள்ளார். தன்னையறிதல் முதல் மெய்ந்நிலை அடைதல் ஈறாக உள்ள பத்துத் தலைப்புகளில், தலைப்புக்குப் பத்துப் பாடல் வீதம் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. தனிப் பா மஞ்சரி ஆசிரியர்: தென் திருப்பேரை - அபி நவ காள மேகம்அநந்த கிருஷ்ணையங்கார். இவர் அவ்வப் போது இயற்றிய 225 தனிப்பாக்களின் தொகுப்பு இது. பல வகைப் பாக்கள் உள்ளன. அச்சு: திருவைகுண்டம் கான வித்யா பிரஸ்- 1736. இந்த நூலுக்கு வையாபுரிப் பிள்ளை, கு. அருணாசலக் கவுண்டர். டி.கே. சிதம்பரநாத முதலியார், திரு நாராயணையங்கார் முதலிய தலை சிறந்த தமிழ் அறிஞர்கள் நல்ல மதிப்புரை அளித்துள்ளார்கள். R. 43. ஞான் வாசிட்டத் திரட்டு காசுமீரப் பண்டிதர் வடமொழியில் ஆறாயிரம் பாடல் களால் இயற்றிய ஞான வாசிஷ்டம் என்னும் நூலை, வீரை ஆளவந்தார் என்னும் மாதவ பட்டர் தமிழில் பெயர்த்தார். அதிலிருந்து பல பாடல்கள் இப்பெயருடன் தொகுக்கப்பட்டன. தொகுத்தவர் பெயர் தெரிய வில்லை. நந்திகேசுரர் பரம சிவனைக் கேட்டுக் கொண்ட பதினாறு பேறு என்னும் தலைப் பெயருடன், பஞ்சநத மான்மியச் செய்யுளாகிய மறை கள் நிந்தனை” என்பது காணப்படுகிறது. சோவியத் நாட்டுக் கவிதைகள் தொகுப்பு & தமிழாக்கம் - இரகுநாதன். வெ-ஸ்டார் பிர சுரம், ஐடியல் பிரின்டர்ஸ், சென்னை, 1965-உ-அஞ்சலி, நாடும்