பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/667

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 645 ஆங்கிலக் கவிதை மலர்கள் மொழி பெயர்ப்பு ஆசிரியர் - பொ.திருகூட சுந்தரம் பிள்ளை. வெ.காந்தி நிலையம், சென்னை, ராஜன் எலக்டிரிக் பிரஸ், சென்னை. 17 படங்களுடன் கூடிய இரண்டாம் பதிப்பு1951. உ - இதில் ஐந்து பாகங்கள் உள்ளன. அன்னை முதல் "நீயார்: வரை 47 உள்தலைப்புகள் உள்ளன. இந்தியர் சிலர் உட்பட 45 புலவர்கள் ஆங்கிலத்தில் இயற்றிய கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு இது. தமிழ்த் தொகை தொகுப்பும் உரையும் - ரெ.முத்துக் கணேசன். வெ.அழகுப் பதிப்பகம், காரைக்குடி, செளத் இந்தியா ஜிரஸ், காரைக்குடி. உ-இது அகம், புறம் என்னும் இரு பரும் பிரிவின் கீழ், 'விடிவது எப்போது முதல் 'தமிழ் வைப்பு' என்பது வரை 80 உள் தலைப்புகளைக் கொண்டுள்ளது. தொல்காப்பியம்-யாப் பருங் கலம், யாப்பருங் கலக் காரிகை - தண்டியலங்காரம்-வீர சோழியம்-ஆகிய இலக்கண நூல்களின் உரைகளிலிருந்தும், பெருந்தொகை - தமிழ் நாவலர் சரிதை-தனிச் செய்யுள்-சிந்தா மணி ஆகிய நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்ட பல பாடல்களின் தொகுப்பு இது. அருட்பா மாலை இந்நூலுக்குத் தரப்பட்டுள்ள முழுப் பெயர், ஒன்பது துறவி கள் பாடிய திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி என்னும் அருட்பாமாலை - என்பதாம். வெளியீடு - காசிகானந்த சுவாமி கள், திருப்பூவணம். ஒன்பது துறவியரின் பெயர்கள் - காசிகா னந்த ஞானாசாரிய சுவாமிகள், நடேச சுவாமிகள், திருநீல கண்ட சுவாமிகள், சபாபதி சுவாமிகள் கோவிந்த சுவாமிகள், நாராயண சுவாமிகள், அத்வைதானந்த சுவாமிகள், அருண கிரிநாத சுவாமிகள், சண்முகானந்த சுவாமிகள் - ஆகியவை பெயர்கள். தேரையர் திரட்டு வெ.வி.ஆர். சுந்தரம், சச்சிதானந்த அச்சியந்திர சாலை,