பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 647 D. 181. நீதி சாரானுபவத் திரட்டு இது, மனிதர் இயல்பு, நீதி இயல்பு என்னும் இரு பிரிவு கள் உடையது. முதல் பிரிவில் 46 பாக்களும் இரண்டாவதில் 74 பாக்களும் உள்ளன. பல நீதிகள் சொல்லப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் நாகைச் சத்திய ஞானி என்பதும், சகாப்தம் 1710-இல் இயற்றப்பட்ட தென்பதும் இறுதிச் செய்யுளால் தெரிகின்றன. R.468-C. பீரங்கி ஞானத் திரட்டு பீரங்கி ஞானி என்பவர், நட்சத்திர பலன்-சந்திரலக்கின பலன்-முதலிய பல செய்திகள் பற்றி எழுதிய பாடல்களின் தொகுப்பு. R.199-C. புலிப்பாணி பல திரட்டு இரச பற்பம், செய நீர், வீரம், செந்துார வேதை, சாரக் கட்டு, நாகக் கட்டு, இலிங்கக் கட்டு முதலியன செய்யும் வழி பற்றிக் கூறும் பாக்களின் தொகுப்பு. D.1809, மாணிக்க வாசகப் பதம் நூல் தலைப்பில் மாணிக்கவாசகர் பாடின பதம்’ என இருப்பினும், இவர் திருவாசகம் பாடின மாணிக்க வாசகர் இல்லை. இந்த நூல் இசைப்பாட்டாகிய கீர்த்தனை வகைப் பாடல்களின் தொகுப்பு; வேதாந்தம் பற்றியது. மருத்துவ நாடித் திரட்டு வெ-கருப்பண்ண பிள்ளை-1902. உள்ளுறை : அகத்தியர் சரக்கு சுத்தி (அல்லது) கன்ம சூத்திரம்-150, சூதமுனி நாடி 30, இராசாங்க நாடி-25 ஆகியவற்றின் திரட்டு. பால வாகடத் திரட்டு 18 சித்தர்கள் அருளிய வாகடத் (மருத்துவநூல்) திரட்டு. மருத்துவம் பற்றி 1200 பாடல்கள் உள.வெ.சுந்தர முதலியார். 1890. -