பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழ் நூல் தொகுப்புக் கலை

வெளியாக்கினர். இந்தத் தொகை நூல் அச்சாகி வெளியானதும், நான்கு நாற்றாண்டுக்காலம் தனியாட்சி புரிந்துவந்த Planudean A11tl1ological என்னும் நூல் மறையலாயிற்று. மக்களுக்கு - வாழ்வு வருவதும் போவதும் போலவே நூல்களுக்கும் உண்டு போலும்!

இவையே யன்றி, இன்னும் பல தொகுப்பு நூல்கள் காலத் திற்குக் காலம் கிரீக் மொழியில் தோன்றின. எத்தனையோ தொகை நூல்கள் அச்சிடப்படாமல் அழிந்தும் போயிருக்கலாம். கி.பி. 980-இல் தொகுத்து எழுதப்பட்ட ‘Palatine Manuscript' என்னும் கையெழுத்துப்படி, கி.பி. 1606-07 கால அளவில் தான் ஒரு நூல் நிலையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது என் மால், இதுபோல் இன்னும் எத்தனையோ கையெழுத்துப் படிகள் அறியப்படாமல், அச்சிடப்படாமல் அழிந்து போயிருக்கலா மல்லவா? இவ்வாறு நூல்கள் அழிந்து போவது எல்லா மொழி களிலுமே இயற்கை போலும்!

பதினாறு பாகங்கள் :

இதுகாறும் கூறப்பட்ட அறிஞர்களாலும் இன்னும் பிறரா லும் தொகுக்கப்பட்ட கிரீக் தொகை நூல்களிலுள்ள பாடல் கள், பதினாறு பாகங்களாக வகுத்து அடக்கப்பட்டுப் பதினாறு நூல்களாக அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளன என்னும் செய்தி முன்னரே ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஃதாவது:Palatine Manuscript என்னும் கையெழுத்துப் படியிலுள்ள பாடல்கள் பதினைந்து பாகங்களாகவும் Planudean Manuscript (Planudean Anthological )என்னும் கையெழுத்துப் படியிலுள்ள புதிய பாடல்கள் பதினாறாவது பாகமாகவும் அமைக்கப்பட்டுப் பதினாறு தொகை நூல்களாக அச்சிடப்பட்டு வெளிவந்தன. இந்தப்பதினாறு கிரீக் தொகை நூல்களிலும் அடங்கியுள்ள பாடல்களைப் பற்றி ஈண்டு நாம் ஓரளவேனும் அறிந்து கொள் வோமாயின், நம் தமிழ் மொழியிலுள்ள தொகை நூல்களின் இயல்புகளையும் அருமை பெருமைகளையும் ஆராய்ந்தறிந்து வியந்து மகிழமுடியும். எனவே, இந்தப் பதினாறு தொகை நூல்களைப் பற்றிய விவரங்களையும் முறையே காண்பாம்!