பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 தமிழ்நூல் தொகுப்புக் கலை தஞ்சை வாண்ன் கோவை, கப்பல் கோவை, கூடல் கோவை, அசதிக் கோவை, புலியூர்க் கோவை - முதலிய பல கோவை நூல்களிலிருந்து எடுத்த 252 பாடல்களின் தொகுப்பு இது. பெரும்பாலான கோவைகள் அச்சிடப்படாதவை. இறுதியில், சில செய்யுட்கள், கோவைச் செய்யுள் அல்லாத தனிப் பாடல் களாக உள்ளன. - No. 364. சிவானு போகத் திரட்டு கடவுள் வாழ்த்து, முதல் மங்கல வாழ்த்து ஈறாக உள்ள 63 பிரிவுகளில் 305 பாடல்கள் உள்ளன. அசத் ஞான தரிசனம்' என்பது முதல் வீட்டு நெறிப் பால்’ என்பது வரை யிலான 73 நூல்களிலிருந்து இந்தப் பாடல்கள் திரட்டப் பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் சரித்திரம் ஆசிரியர்: சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர். கொக்கு வில் - சோதிடப் பிரகர்ச யந்திர சாலைப் பதிப்பு. நள- கார்த் திகை, உள்ளுறை: அகத்தியனர்ர் முதல் சிந்தாமணி நிகண்டு ஆசிரியர் வைத்தியலிங்கப் பிள்ளை வரையிலான புலவர்கள் பலரின் வரலாறுகள் பாடல்களால் "எழுதப்பட்டுள்ளன. உரை யும் உண்டு. பல வரலாற்று நூல்களை ஆராய்ந்து ஆசிரியர் இதை எழுதினாராம். பலர் வரலாற்றுப் பாடல்களின் தொகுப்பு இது. - சிட்டுக் கவித் திரட்டு No. 866. இந்தத் திரட்டில் இரண்டு சீட்டுக் கவிகளும் ஒரு கலித்துறையும் உள்ளன. முதல் சீட்டுக்கவி-இராமலிங் கேந்திரனுக்கு அழகம் பெருமாள் எழுதியது. இரண்டாவதுவடமெை) நராதிபதிக்கு நமச்சிவாயக் கவி அனுப்பியது. கலித் துறை-பெரியசாமி என்பவர் மீது உள்ளது. சோதிட நூல் திரட்டு சில சோதிட (No. 677, Wol II) நூல்களில் உள்ள பாடல் களின் திரட்டு இது. தமிழ்ப் பாடல்களின் இடையிடையே உரை நடைகளும் தெலுங்குப் பாடல் சிலவும் கலந்துள்ளன. உ-மாசப் பலன், ஆண்டு பலன், கிரகங்கள் இராசிகளில் இருக்