பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/674

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


652 தமிழ்நூல் தொகுப்புக் கலை சிற்சில பாடல்களின் தொகுப்பு. சோதிடப் பாடல் ஒன்று பார் வைக்கு (மாதிரிக்கு) வருமாறு: 'ஆதிரை பரணி யரர லாயில்(யும்) முப்பூரம் கேட்டை தீ துறு விசாகம் சோதி சித்திரை மகt ரா(றில்) மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார்; பாய்தனில் படுத்தார் சாவர் பாம்பின்வாய்த் தேரைதிண்ணம்" இப்பாடலின் முதலடி தெளிவாய் இல்லை. இந்தப் பாடலை நம்பி அஞ்சக் கூடாது. நடப்பது நடப்பதாகுக. போப்பின் கவிதைத் தொகுப்பு வெ - கே.சிங்காரவேலு முதலியார். ஸ்டார் ஆப்இந்தியா அச்சுக் கூடம், சென்னை. 1869. பல நூல்களிலிருந்து தொகுக் கப்பட்டுள்ளது. பொங்கு புனல் ஆ - சு. சண்முகம். வளர்மதி வெளியீடு. ரீமதிபிரின்டர்ஸ் சென்னை. விற்பனை உரிமை - கலைஞன் பதிப்பகம். ஏப்ரல் 1964, உ - காணிக்கை, கவிதை, காதல், சமுதாயம், மெய்ப் பொருள் - என்னும் பொருள்கள் பற்றிய பல பாடல்களின் தொகுப்பு. பிள்ளையார் சிலை ஆ-கவிஞர் தமிழ் முடி. வானதி பதிப்பக வெளியீடு, சென்னை. நாவல் ஆர்ட் பிரின்டர்ஸ். சனவரி 1967, உ - பிள்ளை யார் சிலை முதல் பாரதத்தின் பண்புவரையிலான 20 தலைப்பு களில் பல பாடல்கள் உள்ளன. பரிசுத் தொகுதி அண்ணாமலைப் பல்கலைக் கழகம் குறிப்பிட்ட ஒரு வரைத் தேர்வு செய்து பரிசு கொடுப்பதற்காகத் திருப்பனந் தாள் ஆதீனம் அறக்கட்டளை வைத்துள்ளது. அதற்காகச் செய்யுள் தொகுதி வெளியிடுவது வழக்கம். யாராவது ஒரு புலவர் பெயரால் அப்பரிசுத் தொகுதி வெளியிடப்பெறும். நாம் இங்கே, சேக்கிழார், கம்பர், ஆதிகுமரகுருபர அடிகளார் ஆகிய மூவர் பெயரால் உள்ள தொகுதிகளைக் காணலாம் அவை வருக :- -