பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/675

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் - 653 சேக்கிழார் தமிழ்ப் பரிசுத் தொகுதி பதிப்பு: டாக்டர் அ.சிதம்பரநாதச் செட்டியார்.வெளியீடுஅண்ணாமலைப் பல்கலைக் கழகம். 4-5-1942- மொத்தச் செய்யுள் 750. பெரிய புராணத்திலிருந்து 250 செய்யுள்களும் பிறநூல்களிலிருந்து 500 செய்யுள்களும் தொகுக்கப்பட்டுள்ளன. கம்பர் நினைவுப் பரிசுத் தொகுதி பதிப்பு-ஆ. பூவராகம் பிள்ளை. வெளியீடு - அ.ப.க. கழகம் 1944. மொத்தப் பாடல்கள் 750. சீவக சிந்தாமணி 100 பாடல். கம்பராமாயணம் 100. சிலப்பதிகாரம் 200 வரிகள் (அடிகள்). ஏனைய 32 நூல்களிலிருந்து 500 பாடல்கள் (2050 வரிகள்). ஆதி குமரகுருபர அடிகளார் நினைவுப் பரிசுத் தொகுதி பதிப்பு-மு. அருணாசலம் பிள்ளை, வெளியீடு-அ.ப.க. கழகம். 750 செய்யுள். பரஞ்சோதியார் திருவிளையாடல் புராணம் - 200 பாக்கள். திருவிடைமருதூர்த் தலபுராணம் - 50 பாக்கள். ஏனைய 62 நூல்களிலிருந்து 500 பாக்கள்: ஆண்டு –1945. இவ்வாறு மேலும் பல தொகுதிகள் உள்ளன. தேச பக்திப் பாடல்கள் வெ - பப்ளி கேஷன் டிவிஷன், செய்தி - ஒலி பரப்பு அமைச்சரகம்-இந்திய அரசு. அச்சு - Messers HOE & Co., Madras. சூலை 1964. திருச்சி - சென்னை வானொலி நிலையங் கள் ஒலி பரப்பிய பாடல்களின் தொகுப்பு. உ. எல்லாம் கொடுப்போம் முதல் நேருக்கு நேராய் வரை 39 தலைப்பு களில் பாடல்கள் உள்ளன. ஆசிரியர்கள்:- மு. அண்ணாமலை, கண்ணதாசன், கம்பதாசன், பாரதியார், ச.து. சுப்பிரமணிய யோகி,தூரன், தமிழழகன் முதலியோர் பாடல்களின் தொகுப்பு. தமிழ்க் குமரி பாடல்கள் ஆ - பால பாரதி ச.து. சுப்பிரமணிய யோகியார்-ஸ்டார்