பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 தமிழ்நூல் தொகுப்புக் கலை பிரசுரம், திருச்சி. குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1945, தமிழ்க் குமரி முதல் காதல் தேன்வரை 29 தலைப்புகள், அகல்யா என்னும் சிறு காவியமும் இதில் உள்ளது. 4 பாரசீகப் பாடல்களின் மொழி பெயர்ப்பும் இதில் உள்ளது இது முதல் பதிப்பு. தமிழ்க் குமரி ஆ - பாலபாரதி சது. சுப்பிரமணிய யோகி. யோகியார் பதிப்பகம், சென்னை, சுதேசமித்திரன் பிரஸ், சென்னை. தமிழ்க் குமரி முதல் காசில்லாக் கனகரத்தினம் வரை 36 தலைப்புகளில் பாக்கள் உள. மேலும் இதில், உமார் கயாம் என்னும் பாரசீகக் கவிஞரின் 101 பாடல்களின் தமிழ் மொழி பெயர்ப்புப் பாடல்களும் உள்ளன. முதல் தலைப்பின் பெயர் நூலுக்குத் தரப்பட்டுள்ளது. இது இரண்டாம் பதிப்பாகத் தெரிகிறது. ரமண சந்நிதி முறை ஆ - முகவைக் கண்ண முருகனார்.முதல் பதிப்பு 1933-இல் ரமணாசிரமத்தாரால் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1939. சென்னை. லா ஜர்னல்’ அச்சுக் கூடம். உ- ரமண புராணம் முதல் பொறை யிரத்தல் வரை 12 தலைப்புகளில் பாடல்கள் பலவும், பல சிறு நூல்களும் தொகுக்கப்பட்டது இது. ஈத்துவக்கும் இன்பம் ஆ-ம. அரங்கநாதன். வெ.மு. துளசி, நீடாமங்கலம். முதல் பதிப்பு - சனவரி 1961. இரண்டாம் பதிப்பு - ஆகஸ்ட் 1961. சண்முகம் பிரஸ் (பி.லி.), சென்னை. நூல் நான்கு பாகங் களாக உள்ளது. அவையாவன : முதல் பாகம்-உண்டியளிப்பு - 20 உள்தலைப்பு. இரண்டாம் பாகம்-பள்ளிச் சீரமைப்பு - 20 13 மூன்றாம் பாகம் - உடை யளிப்பு – 13 * + நான்காம் பாகம்-பொது. – 23