பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/680

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


658 தமிழ்நூல் தொகுப்புக் கலை செய்யுள் திரட்டு தொ - ம.வி. இராமாநுசாசாரி. மூன்றாம் பதிப்பு - 1906, அடுத்த பதிப்பு - 1918. மொத்தம் 500 பாடல்கள். இரண்டு பாகங்கள். முதல் பாகம் 250 பாக்கள். இரண்டாம் பாகம் 250 பாக்கள். சிவ நெறிச் செய்யுள் திரட்டு தொ - ப. இராமநாதப் பிள்ளை. வெ - கழகம், பிப்ரவரி, 1969, 27 பெரிய தலைப்புகளில் 2273 பாக்கள் உள்ளன. ஏறக் குறைய 150 நூல்களிலிருந்து திரட்டப்பவை இவை, பல்வேறு வகைச் சைவ நூற் பாடல்களின் தொகுப்பு. தற்காலத் தமிழ்க் கவிதை (விமர்சனம்) தொ - U.R.M. செட்டியார். வெ-ஸ்டார் பிரசுரம், இராமச் சந்திரபுரம். மதராஸ் ரிப்பன் பிரஸ். இராமச் சந்திர புரம். 1948, உ - சுப்பிர மணிய பாரதியார், பாரதி தாசன், தேவி, சுத்தானந்த பாரதியார், சுப்பிரமணிய யோகி, நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை, சோமு, உமார் கயாம், ஷெல்லி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இரவீந்திர நாத் தாகூர் ஆகியோரின் சிற்சில பாடல்கள் மதிப்பீட்டுடன் தரப் பட்டுள்ளன. ஒளவையார் பாடல்கள் தொ - உரை - புலியூர்க் கேசிகன். மல்லிகைப் பதிப்பகம், சென்னை, மெட்ரோ பாலிடன் பிரஸ், சென்னை. 1962. ஒளவையாரின் தனிப் பாடல்களின் தொகுப்பு இது. உ -முதல் பாடல் - பரமனுக்குப் பாரம்' என்ற தலைப்பில், 'இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி விட்ட சிவன் செத்தானோ... ... : ל என்ற பாடல். 107 ஆம் தலைப்பாகிய 'உகுத்தேன்’ என்ற தலைப்பில் 'எம்மிகழள்தவர் தம்மிகழாரே என்று தொடங்கும் பாடல் உளது. மொத்தம் 107 பாடல்கள். நியாயக் களஞ்சியம் ஆ-கவியரசு கு. நடேசக் கவுண்டர். வெ-மீனாட்சி