பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 659 புத்தக நிலையம், மதுரை. மங்கை அச்சகம், சென்னை. 1961. பலவகை நியாயங்களைக் கூறும் பாடல்களைத் தொகுத்துத் தந்து விளக்க விவரமும் எழுதியுள்ளார் ஆசிரியர். திருமால் பரிபாடல் தொ-உரை-புலியூர்க் கேசிகன். கற்பகாம்பிகை பதிப்பகம், சென்னை. மெட்ரோ பாலிடன் பிரஸ், சென்னை. 1962. பரி பாடல் என்னும் சங்க நூலில் திருமால் பற்றி உள்ள ஏழு பாடல்கள் எடுத்து உரையுடன் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவை:-தாள்நிழல் பரவுதும், தலையுற வணங்கினேம், நின் நேமி நிழல், வேறுவேறு பெயரோய், நின்னடி தொழுதனெம், துன்பம் களைவோன், நல்லடி பரவுதும் - என்னும் ஏழு தலைப்பின் கீழ் உள்ளன. ஞானச் திரட்டு R.4657. இதில் பிரமானுபோகம், கைவல்யம் முதலிய 35-க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து திரட்டப் பட்ட பாடல் கள் உள்ளன. இது, திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தி லிருந்து வரவழைத்து எழுதப்பட்டது. R. 5.72. தலை சேர்வை வெண்பாக்கள் ஆ-குழந்தைக் கவி ராசர். உள்ளுறை-திரிகடுகம், நான் மணிக்கடிகை, செய்யுளியல், ஒழிபியல், நன்னூல், கந்தர் அநுபூதி, ஆனந்த லகரி, சவுந்தரிய லகரி, குமர குருபர சுவாமிகள் பிள்ளைத் தமிழ், விபூதி உருத்திரர்ட்சம்-முதலிய நூல்களில் உள்ள பாடல்களின் முதல் குறிப்பை (முதல் சொல் லையோ-சொற்றொடரையோ) விளக்கும் வெண்பாக்களும் விருத்தங்களும் கொண்டது. இது. பொன்னையா மணி மாலை தொ-தஞ்சாவூர் கே.பி. கிட்டப்பா & கே.பி. சிவானந்தம். வெ-தர்பணா நாட்டியக் கல்லூரி. தர்பனா சிதம்பரம்’ அகமதாபாத். ஜூலை 1961. இந் நூலுக்கு மிருணாளினி சாராபாய் நூன்முகம் எழுதியுள்ளார். சங்கீத வித்து வான் பொன்னையா பிள்ளை வைத்துப் போன சுவடிகளையும் சுரசாகித்தியக் குறிப்பேடுகளையும்