பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/683

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 661 R. 2966. பல் வகை மந்திரப் பாடல்கள் பிள்ளை பெறாதவர்க்கு எண்ணெய் ஒத மந்திரம், சுளுக்கு மந்திரம், சுப் பிரமணியர் அகவல், சுப்பிரமணியர் திரு நீற்று மந்திரம், வீர பத்திரன் மந்திரம், அனுமந்த ராயன் மந்திரம், பிள்ளையார் மந்திரம், காட்டேரி மந்திரம், காளி மந்திரம், சுப்பிரமணியர் தியானம், பத்திர காளி மந்திரம், தேங்காய் குண்ணி மந்திரம், சாமுண்டி மந்திரம்-முதலியவை பற்றிய பாடல்களின் தொகுப்பு இது. பல வித்துவான்கள் பாடிய தனிச்செய்யுள் சிந்தாமணி மதுரை - முறையூர் சண்முகம் செட்டியார் விருப்பப்படி மதுரை - மு. ரா. கந்தசாமிக் கவிராயர் தொகுத்தது இது. மதுரை விவேகபாது அச்சியந்திர சாலை - 1908, மொத்தச் செய்யுள் - 3815. சங்ககால - இடைக்கால-பிற்காலப் புலவர் களுள் 180 புலவர்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முகவுரை-மு. இராகவையங்கார்...1 - 8-1908 - மதுரை. இன் றொகை இதனை இன் தொகை எனப் பிரிக்கவேண்டும். ஆசிரியர்பண்டித இராம சுப்பிர மணிய நாவலர். செந்தமிழ் நிலையம், பதும நாதபுரம், தக்கலை, தென் திருவிதாங்கூர் - 1947. உள்ளுறை: கடவுள் வணக்கப் பாடல். அறவியல் - 120 நீதி வாக்கியங்கள். பொருளியல்-250 நீதி வாக்கியங்கள். இன்ப வியல்-30 வாக்கியங்கள். வீட்டியல் - 30 வாக்கியங்கள். அற மொழி-175 வாக்கியங்கள். அறவுரை - 116 வாக்கியங்கள் - ஆகியவற்றின் தொகுப்பு. இறுதி இரண்டும், ஆத்தி சூடி - கொன்றை வேந்தன் போல் அகர வரிசையில் உள்ளன. எல்லாமே ஒவ்வொரு வரியாகும். வண்ண சமுத்திரம் முகவுரை இல்லை. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. E. வேத போதகம் என்பவரின் முயற்சியால் அச்சிடப்பட்டதா கத் தெரிகிறது. அச்சு: PAYNE & CO., Madras. 1938. இது