பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 தமிழ்நூல் தொகுப்புக் கலை R,5083, பலர்பேரில் வண்ணங்கள் திருமலைத் தொண்டைமான் மீது கப்பல் பாட்டு, முருகன் வண்ணம், விநாயகர் வண்ணம், மருங்காபுரித் துரைமீது வண்ணம் முதலியவற்றின் தொகுப்பு. R.5156. சிவகங்கை சமத்தானத் தலைமுறைக் கவிகள் கவுரி வல்லவராசன்-போதகுரு மகாராசா முதலியோர் மீது பாடல்கள், வெண்பாப்புலி கவிராசர் மீது அரவக்குறிச்சி சொக்கலிங்கக் கவிராயர் பாடிய சீட்டுக் கவிகள், சபாபதிப் பிள்ளை மீது பாடல், முத்து விசைய ரகுநாதகவுரி வல்லவப் பெரியவுடையார் தேவர் மீது பாடல், மற்றும் சிலர்மீது பாடல் -உள. இவற்றுள் சில அச்சிடப்பட்டுள்ளனவாம்; சில தனிப் பாடல் திரட்டாக உள்ளனவாம். கவிச் சுவை ஆ-மு.சு.சங்கரன்.வெ.சிவகாமி பதிப்பகம், நெல்லை. அணிந்துரை.கிருபானந்தவாரியார். பாடல்கட்கு இராகமும் தாளமும் தரப்பட்டுள்ளன. ஆண்டு 1971. - உள்ளுறை : பணி மனமே, முத்தமிழ்த் தெய்வம், பேசிடு வாய் கிளியே, நான் வணங்கும் தெய்வம், அன்பார்ந்த மனத் தரசி, கலங் காண்ப தெந்நாளோ-முதலிய பல தலைப்புகளில் சுவையான பாடல்கள் உள்ளன. கவிதையும் காவியமும் ஆ.கிருஷ்ணராஜா என்னும் தமிழவேள். வெ-புலவர் பதிப் பகம், புதுச்சேரி-3. இளங்கோ அச்சகம், புதுச்சேரி.1967. உள்ளுறை-முதல் பகுதி. மணமகன்’ சிறு காப்பியம். இரண்டாம் பகுதி: தமிழ் முதல் சிறுவனிடம் சிக்கிய பறவை வரையிலான 13 தலைப்புகளில் பல பாடல்கள் உள்ளன. பல இதழ்களில் வந்தவை. கவிஞர் கண்ட ம.பொ.சி. தொ-கவி கா.மு.ஷெரிப், இன்ப நிலையம், சென்னை. செளந்தரா பிரின்டர்ஸ்.1966. ம.பொ. சிவஞானம் அவர்களின் மணிவிழா மலர், 51 புலவர்களின் பாடல்கள் இடம் பெற் றுள்ளன.