பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/687

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. நான்கு காலம் -2 பல்வேறு வகைச் சிற்றிலக்கியத் திரட்டுகள் தமிழில் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் இருப்பதாகச் சொல் வர். இன்னும் கூடுதலாகவும் இருக்கலாம். 96வகைச் சிற்றிலக் கியங்களை 96 வகைச் சிறு பிரபந்தங்கள் என்று வடமொழிப் பெயர் இட்டுக் குறிப்பது வழக்கமாகிவிட்டது. பல சிற்றிலக் கியங்களைத் தொகுத்து ஒரு வெளியீடாகப் படைக்கும் நூலுக்குப் பிரபந்தத் திரட்டு என்னும் பெயர் கொடுக்கப்பட் டுள்ளது. இப்பிரபந்தத் திரட்டில், ஒருவர் எழுதிய பிரபந்தங் களும் இருக்கும். பலர் எழுதிய பிரபந்தங்களும் இருக்கும். சில பிரபந்தங்களுடன் தனிப் பாடல்கள் சிலவும் இருப்பதுண்டு, மற்றும், முற்காலம் - இடைக்காலம் - பிற்காலம் - இருபதாம் நூற்றாண்டு - ஆகிய நான்கு காலத்து நூல்களின் திரட்டும் இந்தத் தலைப்பில் இடம் பெற்றிருக்கும். இனி நூல் (பிர பந்தத்) திரட்டுகள் வருமாறு: திருமயிலைப் பிரபந்தத் திரட்டு சென்னை-மயிலாப்பூர் இறைவர்மீது பாடிய நூல்களின் திரட்டு இது. தமிழக அரசு ஒலைச் சுவடி நூல் நிலையத்தில் உள்ளது. M.G.O.M.S. 27. முகவுரை - தி. சந்திர சேகரன். 15-12 1952. அச்சு-சென்னை அரசு அச்சுக் கூடம் 1953. இதில் நான்கு நூல்கள் உள்ளன. இனி, நூல்களின் பெயர்களும் ஆசிரியர் பெயர்களும் நூல் நிலைய விவரக் குறிப்பும் முறையே வருமாறு: 1. திருமயிலைச் சிங்கார வேலர் பிள்ளைத் தமிழ், ஆசிரி யர்-தாண்டவராயர்; 18ஆம் நூற்றாண்டினர் இவர். தி.ம.பி. தமிழ்-R.861, 887 எண்கள் கொண்டது. இதன் காகிதப் பிரதி, 1925-26-இல் மயிலாப்பூர் சி.வி. ஜம்புலிங்கம் பிள்ளையிடம் விலைக்கு வாங்கியது. 2. திரு மயிலைச் சிங்கார வேலர் கோவை-ஆசிரியர் அம்பல வாணக்கவிராயர். R.884. இதன் காகிதப் பிரதியும் ஜம்புலிங்கம் பிள்ளையிடம் 1925-26 இல் விலைக்கு வாங்கியது. தி.ம.உ.