பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 தமிழ்நூல் தொகுப்புக் கலை வெண்பா R.883, தி.ம. வெண்பா R.886 ஆகிய காகிதப் பிரதி களும் அவரிடமிருந்து வாங்கியவை. - 3. திரு மயிலை உவமை வெண்பா, ஆசிரியர்: நெல்லை நடலிங்கக் கவிராசர். R.883. காகிதப் பிரதி 1925-26 இல் ஜம்புலிங்கம் பிள்ளையிடம் விலைக்கு வாங்கியது. 4. திரு மயிலை வெண்பா-ஆசிரியர் பெயர் தெரியவில்லை. R.886, காகிதப் பிரதி 1925-26இல் ஜம்புலிங்கம் பின்ளையிடம் விலைக்கு வாங்கியது. - இந்த நான்கு நூல்களும் 1953 ஆம் ஆண்டு அச்சிடப் பெற்றது. இந்நூல் ஒர் ஊர் பற்றிய திரட்டு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு திருவாவடுதுறை ஆதீனத்தின் உதவி கொண்டு, உ.வே.சா. அவர்களால், சென்னை கமர்சியல் அச்சுக் கூடத்தில் அட்சயஆனி-1926 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக அச்சிட்டு வெளி யிடப் பெற்றது. உ.வே.சா. 21-6-1926 நாளிட்டு முகவுரை) எழுதியுள்ளார்கள். திருத்துருத்திக் கச்சி விநாயகர் பதிகம்' முதல் பொன்னுரசல் வரையுள்ள 46 நூல்களின் திரட்டு இது. மொத்தப் பாடல்கள்-3201. இதன் ஆசிரியர்-திரிசிர புரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நூல்கள் சிலவற்றைத் தியாகராசச் செட்டியார் முதலியோர் முன்பு பதிப்பித்துள்ள னர். இந்தத் தொகுப்பின் முதல் பதிப்பை உ.வே.சா. 1910 ஆம் ஆண்டு பதிப்பித்தார். இந்த இரண்டாம் பதிப்பில் முதல் பதிப்பின்போது முழுதும் கிடைக்காத நூல்கள் சிலவற் றின் மற்ற பாடல்களும், முழு நூல்கள் சிலவும் சேர்க்கப்பெற் றுள்ளன. சீகாழிக் கோவை, வியாசைக் கோவை, திருவூறைப் பதிற்றுப்பத் தந்தாதி, பொன்னூசல் முதலிய நூல்கள் சில புதிதாகச் சேர்க்கப் பெற்றுள்ளன. மீ.சு.பி.பி.திரட்டு திருவாவடுதுறை ஆதினம் அம்பல வாண தேசிகரிடம் இருந்த படி (பிரதி இது-உ.வே. சாமிநாதையர் பதிப்பு.